தமிழகத்தில் நீட் தேர்வில் முதலிடம் பெற்ற வெங்கடபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்எல்ஏ சவுமியா அன்புமணி

  • விழுப்புரம்: நீட் மறுத்தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த விழுப்புரம் மாணவர் வெங்கடபதி வேலாயுதம் என்பவரின் வீட்டுக்கே சென்ற தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி பாராட்டுகளை தெரிவித்தார்.

    Advertisement

    நாடு முழுவதும் மருத்துவச் சேர்க்கைக்கு நீட் எனும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Advertisement

    எனினும் ஆண்டுதோறும் மே மாதத்தில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்வில் முறைகேடு நடத்தப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து நீட் மறுத்தேர்வு கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் இந்திய அளவில் பஞ்சாப், ஹரினாயாவை சேர்ந்த ஆர்யன் குப்தா, பன்சுல் பன்சால் ஆகிய இருவர் முதலிடத்தை பெற்றனர். இவர்கள் தலா 715 மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.

    Advertisement

    அது போல் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் வெங்கடபதி வெங்கடாசலம் என்பவர் 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று முதலிடத்தை பிடித்தார். தமிழகத்தில் 12 மாணவர்கள் 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தமிழகத்தில் வெங்கடபடதி ஸ்ரீனிகா (AIR 27), சுடர் (AIR- 45), வனிஷா சதீஷ் (AIR-51), சபரி (AIR- 59), ஜெய்கிருஷ்ணா (AIR- 75), சம்விதா (AIR- 82), நவிதனா (AIR- 88), நிகில் சிவநாதன் (AIR-92), ஜனனி ஸ்வேதா (AIR- 112), ரோஹித் மேத்யூ ரவீந்திரராஜன் (AIR- 115), ஜெயகிருஷ்ணா (AIR- 134) ஆகிய 12 மாணவர்கள் அகில இந்திய அளவில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

    Advertisement

    தமிழகத்தை பொருத்தமட்டில் 307 மையங்களில் நடந்த நீட் மறுத்தேர்வை 1.42 லட்சம் பேர் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த வெங்கடபதி வேலாயுதத்தின் வீட்டிற்கு தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி சென்றிருந்தார். அங்கு அந்த மாணவரை வாழ்த்தினார். விழுப்புரத்தில் பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரநாத் - மருத்துவர் புனிதவதி தம்பதியரின் மகன்தான் இந்த வெங்கடபதி வேலாயுதம் ஆவார்.

    English Summary

    Dharmapuri MLA Sowmiya Anbumani meet Villupuram Neet topper Venkatapathi Velayutham and she praised him for his future studies.