பட்டையா? நாமமா? சர்ச்சை பேச்சால் சின்னாபின்னமான பொன்முடி! ஒன்றரை ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்டார்!

  • விழுப்புரம்: கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்து மதம் குறித்தும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக அவரது துணை பொது செயலாளர் பதவி திமுக தலைவர் ஸ்டாலினால் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய பொன்முடி தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு திமுக தலைமையையே சங்கடத்தில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார்.

    Advertisement

    அது அந்த பையனுக்கு புரியவில்லை.. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார்." என பேசினார். மேலும், சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டினார். அதுமட்டுமல்லாமல் சைவம், வைணவம் என்றால் என்ன? என்பதற்கு மோசமான ஒப்புமையும் அளித்தார்.

    சர்ச்சை பேச்சு

    இதனால் அவர் பேச்சு சர்ச்சையான நிலையில், கனிமொழி எம்பி உள்ளிட்ட சொந்த கட்சியினரே கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையே அமைச்சர் பொன்முடியை திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் க்டந்த 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார் பொன்முடி. இந்நிலையில் தனது பேச்சுக்கு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் பொன்முடி.

    Advertisement

    பொன்முடி

    நேற்று, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி திமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, எனது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துகளை பெற்றேன்.

    வழக்கு ஒத்திவைப்பு

    விழுப்புரத்தில் திரண்டு வாழ்த்து தெரிவித்த கழகத் தோழர்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் கழகத் தலைவர் வழியில் தொடர்ந்து திராவிட இயக்கக் கொள்கைகளுக்காக பணியாற்றி வருகிறேன். சென்னையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நான் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மன்னிப்பு

    தனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். வழக்கு தொடுத்த சம்பந்தப்பட்ட சகோதரி உள்ளிட்ட யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் உளமார்ந்த மன்னிப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைவர் மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் உள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை மக்கள் உணர்ந்து வருவதாகவும் தவெகவிற்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தப்படுகின்றனர்.

    மாணவர் அமைப்புகள்

    இதற்கெல்லாம் விரைவில் மக்கள் பதில் அளிப்பார்கள். காக்ரோச் ஜனதா பார்ட்டி மற்றும் கம்யூனிஸ்ட்
    மாணவர் அமைப்புகள் குறித்த தகவல்களை கோரி கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை, மாணவர்களின் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வின் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. மாணவர் பருவம் முதலே கொள்கைகளுக்காக போராடி வரும் மாணவர்களின் விழிப்புணர்வுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    English Summary

    DMK leader Ponmudi expressed regret and apologised over his controversial remarks, saying he is sorry if anyone’s feelings were hurt.