விஜய்க்கு MISA பத்தியெல்லாம் தெரியாது! சொல்லிவிட்டு அமைதியான பொன்முடி! கூட்டத்தில் ஒலித்த TRISHA!

  • விழுப்புரம்: முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மின்சா கைது பேசியதைக் கண்டித்து விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொன்முடி, முதல்வர் விஜய்க்கு மிசா குறித்து தெரியாது என கூறி விட்டு மவுனமாக இருந்ததார். அபோது கீழே இருந்த தொண்டர்கள் திரிஷா பற்றிதான் தெரியும் என முழக்கமிட்ட நிலியில் அதை பற்றி எல்லாம் நான் கூறவில்லை என சிரித்தபடி பொன்முடி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    Advertisement

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சு மற்றும் செயல்பாடுகளை கண்டித்து ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Advertisement

    ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்," தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மறைக்கப்பட்டுள்ளது. சில திட்டங்களின் பெயர்களை மாற்றி தற்போது புதிய திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டையாவது நிறைவேற்றியிருக்கிறாரா? புதிய திட்டங்கள் மூலம் மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஆட்சி செயல்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

    Advertisement

    திரைப்படத்தில் நடித்ததை வைத்து மட்டும் சட்டமன்றத்திலும், தமிழக மக்கள் முன்னிலையிலும் நடித்துக்கொண்டிருப்பதை மக்கள் வெகுவிரைவில் புரிந்துகொள்வார்கள். நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் இதற்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். திமுக என்பது நீண்டகாலமாக கொள்கையுடன் செயல்பட்டு வரும் இயக்கம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலம் தொடங்கி இளைஞர்களை இயக்கத்தில் இணைத்து வளர்த்ததில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது.

    மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் திமுக தொடர்ந்து வலுவாக செயல்பட்டு வருகிறது. மிசா மற்றும் எமர்ஜென்சி காலகட்டத்தின் கொடுமைகளை நேரடியாக எதிர்கொண்டவர்கள் தாங்கள். அப்போது மாணவர்களாகவும் இயக்கப் பணியாளர்களாகவும் இருந்து நெருக்கடி நிலைக்கு எதிராக போராடினோம். மிசா சட்டம் குறித்து அதன் வரலாற்றை அறியாமல் சட்டப்பேரவையில் பேசுகிறார்கள்.

    Advertisement

    திமுகவினர் மிசா கால கொடுமைகளை எதிர்த்து போராடியவர்கள். அரசியல் நிலைப்பாட்டில் பல்வேறு தரப்பினரையும் சமாளிக்கும் வகையில் செயல்படுவது போன்ற அணுகுமுறை நடிகரின் அரசியல். தமிழக மக்கள் தங்களால் செய்யப்பட்ட தவறுகளை உணர்ந்து எதிர்கால தேர்தல்களில் திமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். வரவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கட்சியினர் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். இதனிடையே, முதலமைச்சர் விஜய் சட்டப் பேரவையில் மிசா தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவருக்கு மிசா குறித்து தெரியாது என மவுனமாக இருந்ததார். கீழே இருந்த தொண்டர்கள் திரிஷா பற்றி தான் தெரியும் என கூறிய உடன் சிரித்தபடி அதை பற்றி எல்லாம் நான் கூறவில்லை என க.பொன்முடி கூறினார். இந்த பேச்சை தொடர்ந்து மெடையில் சிரிப்பொலி எழுந்தது.

    English Summary

    Ponmudy criticises Vijay over MISA remarks during a protest, while a Trisha slogan from party workers sparks laughter.