அரசியல் மட்டும் பேச வேண்டாம்.. மக்களை சந்திக்கும் ராமதாஸ்.. மக்களிடம் வைத்த ஒரே கோரிக்கை!

  • விழுப்புரம்: மருத்துவ ஓய்வில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தன்னை சந்திக்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசியல் பேச வேண்டாம் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலின் போது பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பு மோதல் காரணமாக தனித்தனியாக போட்டியிட்டது. அதில் அன்புமணி தரப்பு அதிமுக உடன் கூட்டணி அமைத்து 4 இடங்களில் வென்றது. குறிப்பாக செளமியா அன்புமணி வெற்றி பெற்று சட்டசபை சென்றுவிட்டார். இன்னொரு பக்கம் ராமதாஸ் தரப்பு சைலண்ட் மோடில் இருந்தது.

    Advertisement

    இதன்பின் அடுத்த ஒரு மாதத்தில் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வந்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து குடும்பத்தினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராமதாஸை அன்புமணி சந்தித்த போது, இருவரும் கட்டியணைத்து உருகினர். ராமதாஸ் கண்ணீர் சிந்தியதால், மனம் உருகிய அன்புமணி, இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று அறிவித்தார்.

    தொடர்ந்து குடும்பத்துடன் தைலாபுரம் வந்து ராமதாஸிடம் ஆசீர்வாதம் பெற்றார். அதேபோல் தனது மகனின் குழந்தையையும் காட்டினார். இதனால் பாமக ஒருங்கிணைந்தது. ஜிகே மணி, அருள் உள்ளிட்டோரையும் ஒதுக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    Advertisement

    அப்போது ராமதாஸ், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பாமகவின் ஒட்டுமொத்த அதிகாரமும் அன்புமணி கையில் கொடுக்கப்பட்டது. அதேபோல் இந்த அறிவிப்புக்கு பின் ராமதாஸ் மருத்துவ ஓய்வு எடுக்க போவதாக கூறி இருந்தார். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் மக்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தன்னை சந்திக்க வரும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசியல் எதுவும் பேச வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது பாமகவை வலிமைப்படுத்தும் என்றும் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Ramadoss: PMK founder Ramadoss Resumes Public Interactions Post Medical Rest, Urges No Political Talks