சவுக்கு சங்கர் மகன் வேப்ப மரத்தில் உயிரை விட்டது ஏன்? விழுப்புரத்தில் என்ன நடந்தது? போலீஸ் விசாரணை

  • விழுப்புரம்: பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் 13 வயது மகன், தாத்தா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.. பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்களும் பரபரக்கின்றன..!! .

    Advertisement

    சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    சவுக்கு சங்கர் மகன்

    வழக்கறிஞரான ஆர்த்தி சென்னையில் பணியாற்றி வருகிறார்.. இவர்களது 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள தாய்வழி தாத்தா செந்தாமரைக் கண்ணன் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளான். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்திருக்கிறான்.

    ஆனால் சமீபகாலமாகவே தியோ ஆழிசை சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. இதனால் படிப்பில் கவனம் செலுத்துமாறு அம்மா ஆர்த்தி சிறுவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன், அம்மா மீதான ஏக்கத்திலும் இருந்துள்ளான். எனவே, தன்னுடைய அம்மாவை பார்ப்பதற்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் தாத்தா வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளான்..

    Advertisement

    வேப்பமரத்தில் தற்கொலை

    இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு கிளம்பி செல்லுமாறு சொல்லிவிட்டு, தங்களது பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.. ஆனால், பள்ளிக்கு போக விருப்பமில்லாமல், வீட்டின் பின்பக்கம் சென்ற சிறுவன், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள வேப்ப மரத்தில் சிறுவன் தியோ ஆழிசை தூக்கில் தொங்கியவாறு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.. சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.. இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததுமே, மரக்காணம் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    மரக்காணம் காவல்துறை விசாரணை

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.. பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது..

    தாய் கண்டித்தது காரணமா அல்லது பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாதது காரணமா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற விசாரணையும் நடந்து வருகிறது.. அதனால் "விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை உயிரிழப்புக்கான காரணம் குறித்து எந்தவித ஊகங்களையும் பரப்பக் கூடாது என்று பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஆனால், பல்வேறு அரசியல் விமர்சனங்களால் சர்ச்சைகளில் சிக்கிவந்த சவுக்கு சங்கர், தனது 13 வயது மகனின் திடீர் இழப்பால் நிலைகுலைந்து போயுள்ளார். குடும்ப சூழல் மற்றும் மன அழுத்தம் இதன் பின்னணியாக இருக்கலாம் எனத் தகவல்கள் கசியும் நிலையில், காவல்துறையினர் இதன் உண்மைத்தன்மை குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Savukku Shankar's 13 year old son found dead near Neem Tree.. What Happened in villupuram? Police Probe Underway