செஞ்சி சிறுமி மாயம்.. அரசை கண்டித்து இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

  • விழுப்புரம்: தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக
    தீவிரமாக முன்வைத்தது. ஆனால் தவெக ஆட்சிக்கு வந்தும் காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரம், செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமாகி 15 நாட்களாகிவிட்டது. காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்து சிறுமியின் ஊரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி குளக்கரை தெருவை சேர்ந்தவர்கள் பவானி - வடிவேல் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இரண்டாவது மகள் ஹேமலதா
    (வயது 7) கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தநாளாகும். பெற்றோர், உறவினர்களுடன் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்துக்கு பிறகு சிறுமி தன் பெற்றோருடன் தூங்கியுள்ளார். இரவு கண் உறங்கும்போது இருந்த மகிழ்ச்சி காலை இல்லை.

    Advertisement

    செஞ்சி சிறுமி மாயம்

    அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் எழுந்தபோது சிறுமி ஹேமாவதி அங்கில்லை. பதறிய பெற்றோர், உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் சிறுமியின் அம்மா பவானி புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சிறுமியை கண்டறிய 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலம்பூண்டி சுற்றுவட்டாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. சிறுமி மாயமான விவகாரம் அதிர்ச்சியையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தியது. அரசியலிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு, காவல்துறைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சத்தியமங்கலம் காவல்துறையிடம் ஆவணங்களை வாங்கி, கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    அதிமுக ஆர்ப்பாட்டம்

    சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மாயமானதால் உறவினர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 15 நாட்களாகியும் சிறுமியை கண்டறிய முடியாததற்கு திமுக, அதிமுக கண்டனம் தெரிவித்தனர். சிறுமியின் சொந்த ஊரான ஆலம்பூண்டியில், அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் காலை போராட்டம் நடைபெறவுள்ளது.

    English Summary

    Viluppuram Senji Aalampoondi 7 year old Girl missing for 15 days. ADMK to conduct protest in Girl's village today.