பழங்குடி மக்கள் கொடுத்த தேர்தல் நிதி.. வெற்றி குறித்து உணர்ச்சிவசத்துடன் பேசிய வன்னி அரசு

  • விழுப்புரம்: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் செயல்பாடும் வரவேற்பை பெற்று வருகிறது. ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிக்கும் மக்களுக்கு மத்தியில், என் தொகுதி பழங்குடி மக்கள் அவருக்கு தேர்தல் நிதி கொடுத்து வாக்களித்ததாக பெருமையுடன் கூறியுள்ளார்.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வன்னியரசு, "பழங்குடி மக்கள் பணம் வாங்காமல் பானை சின்னத்திற்கு வாக்களித்துள்ளாக அனைவரும் கூறுகிறார்கள். பணம் வாங்காமல் வாக்களித்த அனைத்து பழங்குடி மக்களுக்கும் நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பணம் வாங்காமல் மட்டும் இல்லை. அவர்கள் எனக்கு பணம் கொடுத்து வாக்களித்துள்ளனர். இருளர் பழங்குடி மக்கள் எனக்கு தேர்தல் நிதியாக ரூ.25,000 கொடுத்து எனக்கு வாக்களித்தனர்.

    Advertisement

    பழங்குடி மக்களுக்கு நன்றி கடன்

    அவர்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த தொகுதி முழுவதற்கும் கடமைப்பட்டுள்ளேன். திண்டிவனமாக இல்லாமல் திண்டிவளமாக மாற்றுவேன். அதை நோக்கி தான் நான் பயணிக்கிறேன். நமக்கு என்னென்ன தேவை உள்ளது என்பதை அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறேன். பட்ஜெட் கூட்டம் முடிந்தவுடன் திண்டிவனம் தொகுதிக்கான செயல் திட்டங்களில் களமிறங்குவேன்.

    அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் வேண்டும். எந்த பிரச்சனையானாலும் மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும். நாங்கள் புதிதாக சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக மாறியதால் சொல்லவில்லை. எப்போதுமே மக்கள் பிரச்சனைக்காக மக்களுடன் மக்களாக பயணிப்பது தான் எங்களின் வழக்கம். துரைக்கண்ணு அவர்கள் சொல்லும்போது, நீங்கள் எல்லா இடத்திற்கும் சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டு தீர்வு கொடுக்கிறீர்கள் என குறிப்பிட்டார்.

    Advertisement

    உரிமைகள் தேவைகள்

    முன்பு திரைமறைவில் செய்தோம். இப்போது பதவியில் இருப்பதால் நேரடியாக செய்கிறோம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதற்கு முன்பும் இதே வேலையை தான் செய்தோம். இப்போது மக்கள் பணிகளை அமைச்சராக செய்கிறோம். அவ்வளவுதான். மக்களோடு மக்களாக அவர்களின் உரிமைகளை, தேவைகளை நிறைவேற்றுவதுதான் எங்கள் பணி. அதற்கு நான் உங்களுக்கு என்றென்றும் கடமையாற்றுவேன்" என்றார்.

    English Summary

    Minister Vanni Arasu said, People not getting money is big thing. But our constituency tribes gave money for me and voted as well.