கலைஞரை இழிவா பேசிய சீமானுக்கு ஆதரவு.. இதுக்கு பேர் என்ன தெரியுமா.. திமுக மீது வன்னி அரசு காட்டம்

  • விழுப்புரம்: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் நிலவரத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விஜயை தொடர்ந்து தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் பிரவேத்துக்கு தயாராகி வருகிறார்கள். திமுக மீது கடந்த காலங்களில் சீமான் கடுமையான விமர்சனம் வைத்தார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அது மாறியுள்ளது. கலைஞரை மலிவாக விமர்சித்த சீமானை ஆதரப்பது கேவலமான அரசியல் என்று திமுகவை அமைச்சர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முத்தமிழ் அறிஞர் கலைஞரை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் இழிவாக பேசினார். கலைஞரின் பேனாவை உடைப்பேன் என்று கூறினார். அவரை திமுக கண்டிக்கவில்லை. பார்ப்பன கடப்பாரை கொண்டு திராவிட கோட்டையே இடிப்பேன் என்று சீமான் கூறினார். அவரை திமுக அப்போது கண்டிக்கவில்லை.

    Advertisement

    திமுக பதில் சொல்லட்டும்

    திருட்டு திமுக என்று கூறிய சீமானை அப்போது கண்டிக்கவில்லை. அப்போது சீமானை கண்டிக்காமல், இப்போது அவரை திமுக ஆதரிப்பது மலிவான அரசியல். நான் கேட்ட கேள்விக்கு திமுகவில் யாரும் பதில் சொல்லவில்லை. திசை மாற்றும் வேலையை தான் செய்கிறார்கள். தவெகவை எதிர்க்கும் அரசியலை முன்னெடுத்துள்ளனர். அதற்காக எங்கள் மீதும் அர்த்தமற்ற விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். ஆரிய திராவிட யுத்தத்தத்தை முன்னெடுப்பதுதான் இந்திய அரசியல்.

    ஆரிய கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்ட சீமானை ஆதரிப்பது எந்த வகையில் சரி. அதுதான் நான் வைத்த கேள்வி. அதற்கு திமுக நிர்வாகிகள் பதில் சொல்வதில்லை. ஆ.ராசா போன்ற நிர்வாகிகள் மூலமாக அறிக்கை கொடுத்து, எங்களை திட்ட வைக்கிறார்கள். இதன் மூலம் திமுகவின் செயல்பாடு என்ன வகையில் இருக்கிறது என்பதை மக்கள் மன்றத்தில் விட்டுவிடுகிறேன். இதற்கு திமுகவினர் பதில் சொல்ல வேண்டும்.

    Advertisement

    பின்னணி விசாரிப்பு

    போதை இல்லாத தமிழ்நாடு என்பது மிகவும் முக்கியமானது. போதை பொருள் அமைப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தவெகவினர் போதை பொருள் புழக்கத்தில் ஈடுபட்டதால் அவர்களை விடவில்லையே. உடனடியாக அவர்களை சிறைபடுத்தியுள்ளனர். அவர்களின் பின்னணி விசாரித்து போதை மருந்தை கைப்பற்றியுள்ளனர். போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதுதான் தமிழக அரசின் நோக்கம். அதற்காக எந்த தனி நபர்களை பாதுகாக்க மாட்டோம்" என்றார்.

    English Summary

    Minister Vanni Arasu said, Naam Tamilar seeman once slams Kalaignar. Now DMK supporting Seeman is worst politics.