விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூரில், காதல் விவகாரத்தால் 10-ம் வகுப்பு மாணவியின் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மகளுக்கு பலமுறை அறிவுரை கூறியும் அவர் காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடைசியில் தந்தையே மகளின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு சென்றது எப்படி? அந்த வீட்டில் நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாஸ்திரி (40). லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விமலா (35). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் விகாஷினி (14).
விகாஷினி தனது பாட்டி வீடு உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், காரை கிராமத்தில் தங்கி படித்து வந்துள்ளார். அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது... இதையடுத்து சிவசாஸ்திரியும், விமலாவும் மகளை கண்டித்துள்ளனர். தொடர்ந்து அவர் அந்த இளைஞருடன் பழகுவதை தவிர்க்கும் வகையில், 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான வி.பரங்கனி கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளனர். "நீ நன்றாக படிக்க வேண்டும், படிக்கும் காலத்தில் காதல் எல்லாம் வேண்டாம்" என்றெல்லாம் அட்வைஸ் செய்துள்ளனர்.. பிறகு கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விகாஷினியை சேர்த்துள்ளனர். அவர் அங்கு 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால், சொந்த ஊருக்கு வந்த பிறகும் அந்த இளைஞரை மறக்க முடியாமல் அவருடன் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது... சிலசமயம், அந்த இளைஞரை நேரில் சென்று பார்த்தும் வந்தாராம்.. இதைக் கேள்விப்பட்டு பெற்றோர் மீண்டும் மகளை கண்டித்துள்ளனர். இருந்தாலும் விகாஷினி காதலை கைவிடாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் அம்மா விமலா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேலூருக்கு சென்றிருக்கிறார்.. அன்றைய தினம் இரவு வீட்டில் அப்பாவும் 2 மகள்களும் சாப்பிட்டு முடித்து தூங்க சென்றனர்.. அப்போது சிவசாஸ்திரி தனது மூத்த மகளிடம், "நீ அருகிலுள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்று தூங்கு. இங்கு நானும், விகாஷினியும் இங்கேயே தூங்குறோம்" என்று சொல்லி உள்ளார்.. உடனே மூத்த மகளும் சித்தப்பா வீட்டுக்கு தூங்க சென்றுவிட்டார்.. அப்போது சிவசாஸ்திரி விகாஷினியிடம், "படிப்பில் மட்டும்தான் இப்போது கவனம் இருக்கணும்.. நன்றாக படிக்கணும், நல்ல நிலைக்கு வரணும், அந்த இளைஞருடன் பேச்சை நிறுத்தி விடு என அறிவுறுத்தியிருக்கிறார்.. அதற்கு மாணவி, அந்த இளைஞனை காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிவசாஸ்திரி மீண்டும் மகளுக்கு புத்திமதி கூற, இதுவே இருவருக்குள்ளும் வாக்குவாதமாக வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிவசாஸ்திரி, அங்கேயே மகளை கழுத்தை நெரித்து விட்டார்.. இதில் விகாஷினி கீழே சுருண்டு விழுந்துவிட்டார்.. உடனே தன்னுடைய தம்பி சசிக்குமாருக்கு போனை போட்ட சிவசாஸ்திரி, "சின்னவளை கழுத்தை நெரிச்சி போட்டுட்டேன்" என்றாராம்.. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சசிகுமார், உடனடியாக வீட்டுக்கு பதறியடித்து ஓடிவந்துள்ளார்... அங்கு விகாஷினி கீழே விழுந்து கிடக்க, பக்கத்திலேயே சிவசாஸ்திரி அமைதியாக உட்கார்ந்திருந்தாராம். பிறகு, விகாஷினியை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு விகாஷினியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.. இதுகுறித்து தகவலறிந்த வானூர் போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுமியின் தந்தை சிவசாஸ்திரியையும் கைது செய்தனர்.பெற்றோர் கண்டிப்பு
கழுத்தை நெரித்து..
சித்தப்பா வீடு
சின்னவளை கழுத்தை நெரிச்சி...