மாயமான சிறுமி எங்கே? பதைபதைப்பில் செஞ்சி! 8-வது நாளாக போலீசார் தேடுதல்.. தனிப்படையுடன் டிஐஜி ஆலோசனை

  • விழுப்புரம்: காணாமல் போன விழுப்புரம் செஞ்சி சிறுமியை 8 வது நாட்களாக தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். சிறுமி மாயமான விவகார்த்தில் வெளிநபர்களுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காணாமல் போன சிறுமியை மீட்பது குறித்து தனிப்படை போலீசாருடன் டிஐஜி அருளரசு ஆலோசனை நடத்தியுள்ளார்.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம் பூண்டி குளக்கரை பகுதியை சேர்ந்த தம்பதி வடிவேலு - பவானி. இவர்களின் 2-வது மகள் ஹேமாவதிக்கு 7-வயது ஆகிறது. சிறுமி ஹேமாவதி கடந்த 11 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளாள். ஆனால் திடிரென வீட்டில் இருந்த சிறுமி மாயமானாள்.

    Advertisement

    அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால், காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    அந்த தனிப்படை போலீசார், பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சிறுமியை பல இடங்களில் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிறுமியை மீட்பதற்காக போலீசார் சார்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமி மாயமான விவகார்த்தில் வெளிநபர்களுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement
    விழுப்புரம் அரசு பள்ளியில் விஜய் சேதுபதி.. மாணவர்களுக்கு திடீர் பரிசு மழை.. அங்கே தான் 2 டவுட்டு

    அதுபோல் தொடர் குற்றவாளிகள், பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த பட்டியல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    காணாமல் போன 7-வயது சிறுமியை மீட்கும் பணி 8-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், தனிப்படை போலீசாருடன் விழுப்புரம் டிஐஜி அருளரசு இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். காணாமல் போன சிறுமியை மீட்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாகியும் சிறுமியின் கதி என்ன என்பது தெரியாது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Villupuram: A special police team has been searching for the girl who went missing in Gingee, Villupuram, for the eighth consecutive day. Investigators are exploring various angles—examining whether outsiders or local individuals might be involved in her disappearance. Meanwhile, DIG Arularasu held discussions today with the special investigation team regarding efforts to rescue the missing girl.