வெள்ளைப்பூ வந்தது.. விழுப்புரம் சிறுமி எங்கே? பள்ளி அட்டன்டன்ஸ் பதிவேட்டை ஆய்வு செய்த சிபிசிஐடி

  • விழுப்புரம்: செஞ்சியில் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு பெற்றோருடன் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலையில் மாயமானது எப்படி என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. போலீஸார் தீவிரமாகத் தேடியும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.. எனினும் தன்னுடைய மகள் நிச்சயம் திரும்பி வருவாள் என்று சிறுமியின் தாய் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்...!!

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடிவேலு - பவானி தம்பதி. இவர்களது 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. கடந்த 11-ம் தேதி மாலை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, இரவில் பெற்றோர் மற்றும் பாட்டியுடன் ஒரே அறையில் படுத்து தூங்கியுள்ளார். ஆனால் மறுநாள் அதிகாலையில் பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை.

    Advertisement

    விழுப்புரம் சிறுமி எங்கே

    இதையடுத்து சிறுமியின் தந்தை வடிவேலு அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். 10 தனிப்படைகள் அமைத்துத் தேடியும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    மோப்ப நாய்கள், டிரோன்கள் உதவியுடன் கிராமத்தைச் சுற்றியுள்ள கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் போலீஸார் தேடினர். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பல நாட்களாகியும் சிறுமி கண்டுபிடிக்கப்படாததால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    செஞ்சி சிறுமி பெங்களூரில் இருக்கிறாரா? பாய்ந்த சிபிசிஐடி டீம்.. தந்தையின் உறவினர்களிடம் துருவல்?
    Advertisement

    பள்ளிகளில் விசாரணை

    இதையடுத்து கடந்த அக்டோபர் 21-ம் தேதி இரவு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் ஆலம்பூண்டி கிராமத்துக்குச் சென்று, ஏற்கெனவே விசாரிக்கப்பட்டவர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர்.

    சிறுமி மாயமாகி பல நாட்களாகியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 4 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வரும் போலீஸார், சிறுமி படித்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி, சிறுமியின் பள்ளி நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.

    Advertisement

    சிறுமியின் சகோதரியிடமும் விசாரணை

    மேலும், சிறுமியின் சகோதரி படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் கல்லூரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அவரது தோழிகளிடமும் சிறுமி மாயமானது தொடர்பாகக் கேட்டறிந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகள், சிடிஆர் பதிவுகள் மற்றும் செல்போன் டவர் தரவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சிறுமி பெற்றோர் மற்றும் பாட்டியுடன் ஒரே அறையில் தூங்கிய நிலையில், நள்ளிரவில் அவர் எப்படி மாயமானார்? யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றாரா அல்லது யாராவது அழைத்துச் சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    செஞ்சி சிறுமியின் பள்ளியில் முகாமிட்ட சிபிசிஐடி.. சிறுமி உயிரோடு இருக்க வாய்ப்பு? என்ன காரணம்?
    Advertisement

    தாயின் நம்பிக்கை

    இதனிடையே, சிறுமியின் தாய் பவானி, தனது மகள் எங்கிருக்கிறாள் என்று சிவன் கோயிலில் பூ போட்டுப் பார்த்தாராம்.. அதில் வெள்ளைப் பூ வந்ததாம்.. அதனால் தன்னுடைய மகள் நிச்சயமாக உயிருடன் திரும்பி வருவாள், இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் நல்ல செய்தி வரும் என்று போலீஸாரும் சொல்லியிருக்கிறார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Topics: #cbcid police

    English Summary

    Villupuram Girl Hemavathi Missing.. CBCID Checks School Attendance Register, Where Is She?