செஞ்சி சிறுமி எங்கே? 1 க்ளூ கிடைக்கல.. பைக்கில் ஊர் ஊராக அலையும் புதுச்சேரி நபர்: நெகிழ்ச்சி பின்னணி

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதாவை கண்டுபிடிக்க போலீசார் ஒருபுறம் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் களமிறங்கியுள்ளார். சிறுமியின் போட்டோவுடன் பேனர் கட்டியபடி பைக்கில் ஊர் ஊராகச் சென்று, பொதுமக்களிடம் சிறுமி குறித்து விசாரித்து வருகிறார்.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமாவதி கடந்த மாதம் மாயமானார்.. இப்போதுவரை இந்த வழக்கில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.

    Advertisement

    செஞ்சி சிறுமி எங்கே

    வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன் மற்றும் கீதா தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பரதன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடியை, ஒரு ரகசிய இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று போலீசார் 4வது முறையாக தீவிர மற்றும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில்தான் சமூக ஆர்வலர் ஒருவர் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார்.. புதுச்சேரி சேந்தநத்தத்தை சேர்ந்தவர் ஏழுமலை.. இவர்தான் தற்போது இந்த விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது பைக்கின் முன்பகுதியில் சிறுமியின் போட்டோ மற்றும் தகவல்கள் அடங்கிய பேனரைக் கட்டிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகிறார்.

    Advertisement
    Vellore: வேலூரில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்! தூக்கி வீசப்பட்ட 16 வயது சிறுமி பலி!

    புதுச்சேரி ஏழுமலை

    அந்த பேனரில், "காணாமல் போன 7 வயது சிறுமி விரைவில் கிடைக்க நாம் இறைவனை பிரார்த்தனை செய்வோம். சிறுமி கிடைக்கும்வரை பெற்றோர்களில் ஒருவனாக தமிழகம் முழுவதும் எனது விழிப்புணர்வு சுற்றுப்பயணம் தொடரும்" என்று குறிப்பிட்டுள்ளார். சிறுமி கிடைக்கும் வரை இந்த முயற்சியைக் கைவிடப்போவதில்லை என்பதையும் தனது பேனர் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்று புதுச்சேரியின் கிராமப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஏழுமலை, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனது பைக்கை நிறுத்தி சிறுமியின் போட்டாவை காட்டி விசாரித்தார்.. அங்கிருப்பவர்களிடம் "பேனரில் உள்ள சிறுமியை எங்காவது பார்த்தீர்களா? சிறுமி குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொள்கிறார்.

    Advertisement

    சொந்த செலவில் பயணம்

    பஸ் ஸ்டாண்டுகள், டீக்கடைகள் எனப் பல இடங்களில் விசாரிப்பதுடன், தன்னை கடந்து செல்லும் பொதுமக்களிடமும் சிறுமி காணாமல் போன விவரத்தை எடுத்துக் கூறி வருகிறார். மாணவ, மாணவிகளிடமும் சிறுமியின் போட்டோவை காட்டி தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

    செஞ்சி சிறுமி மாயம்.. நள்ளிரவு 12 மணிக்கு வீட்டின் முன் சென்ற வாகனம்.. சிக்கும் வில்லுப்பாட்டு குழு?

    தனது இந்த முயற்சி குறித்து ஏழுமலை செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "மனிதநேய அடிப்படையில்தான் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறேன்.. போலீசாரும் சிபிசிஐடி அதிகாரிகளும் சிறுமியைத் தேடி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், 25 நாட்களாகியும் குழந்தை கிடைக்காதது மனதுக்கு வேதனையாக உள்ளது..

    Advertisement

    செஞ்சி சிறுமி எங்கே

    இது யாருக்கோ நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியவில்லை. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததால் இந்த முயற்சியைத் தொடங்கினேன். விழுப்புரம், மரக்காணம், கடலூர், வளவனூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்றுவிட்டு இப்போது புதுச்சேரிக்கு வந்துள்ளேன். எனது சொந்த பணத்தில்தான் பெட்ரோல் போட்டுக்கொண்டு பயணம் செய்கிறேன். இதன் பின்னணியில் யாரும் இல்லை. எந்த அரசியலும் கிடையாது"

    தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. இந்த நேரத்தில் அந்த சிறுமியின் நிலையை நினைத்து பார்க்கவே வேதனையாக உள்ளது.. பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறுமியைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும்.

    இன்பார்மர்கள் தந்த தகவல்! செஞ்சி சிறுமி வழக்கில் திருப்பம்.. கடத்திய 2 நபர்கள்? புது கோணத்தில் CBCID
    Advertisement

    ஜல்லிக்கட்டுக்கு திரண்டதை போல

    அன்று ஜல்லிக்கட்டுக்காக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டதைப் போல, இந்தக் குழந்தையை தேடும் முயற்சியிலும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.. தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநில காவல் துறையினரும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி சிறுமியைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும்" என்று ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

    English Summary

    Have You Seen The Missing Gingee Girl? Puducherry Man Searches Village to Village on His Bike