அருப்புக்கோட்டை திண்ணையில் தூங்கிய சகோதரிகளுக்கு நேர்ந்த கதி.. நள்ளிரவில் வந்தது யார் தெரியுமா?

  • விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியில், நள்ளிரவில் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் கொலை முயற்சி வழக்கில் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த 60 வயது நபரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அதிர்ச்சிகர வாக்குமூலம் ஒன்றை அந்நபர் தந்துள்ளாராம். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.. என்னதான் நடந்தது?

    Advertisement

    அருப்புக்கோட்டை பாளையம்பட்டி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.. இவருடைய மனைவி 42 வயதான சாந்தி என்பவர் தூய்மைப் பணியாளராக வேலை செய்து தனது 17 வயது மகன் சந்தீப்குமார் மற்றும் 13 வயது மகள் யாழினி ஆகியோரை வளர்த்து வந்துள்ளார்.

    Advertisement

    அருப்புக்கோட்டை திண்ணை

    இந்த சூழ்நிலையில், கணவரை இழந்த பாண்டியராஜின் அக்கா 45 வயதான ஸ்ரீதேவியும் சாந்தியின் வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்றுள்ளனர். பிள்ளைகள் இருவரும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்க, சாந்தியும் ஸ்ரீதேவியும் வீட்டின் வெளிப்புற திண்ணையில் படுத்து உறங்கியுள்ளனர்.

    அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஒட்டுமொத்த கிராமமும் அமைதியில் மூழ்கியிருந்த நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவர் மீதும் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி கொடூரமான முறையில் தீ வைத்து விட்டார்.

    Advertisement

    2 சகோதரிகள் பாவம்

    உடலில் தீப்பற்றி எரிந்ததில் வலியால் துடித்த இரண்டு பெண்களும் மரண ஓலமிட்டு அலறியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து 2 பேரையும் மீட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனாலும், இந்த தீவைப்பு சம்பவத்தில் சாந்திக்கு 70 சதவீத கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருடன் இருந்த ஸ்ரீதேவிக்கு 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இருவருக்குமே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அதிர்ச்சி வாக்குமூலம்

    இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நள்ளிரவில் தப்பியோடிய மர்ம நபரைத் தேடும் பணியில் இறங்கினார்கள்.. முதற்கட்ட விசாரணையில், காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி மணிநகரைச் சேர்ந்த 60 வயதான முத்து என்பவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

    உடனே தலைமறைவாக இருந்த முத்துவை காவல் துறையினர் நேற்று இரவு அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான் பல பகீர் தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    2 பெண்களும் சீரியஸ்

    அதாவது, உயிரிழந்த பாண்டியராஜின் நண்பர்தான் இந்த முத்து.. இவர் பாண்டியராஜ் மறைவுக்குப் பிறகு சாந்தியை தன்னுடன் வந்து வாழுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தாராம். முத்துவின் இந்த தவறான கோரிக்கையை சாந்தி முற்றிலும் நிராகரித்து, அவருடன் செல்ல மறுத்து வந்துள்ளார். ,தனது ஆசைக்கு இணங்காததால் கடும் ஆத்திரமடைந்த முத்து, சாந்தியைப் பழிவாங்கத் துடித்துள்ளார்.

    இதன் காரணமாகவே, சம்பவத்தன்று அதிகாலை யாரும் எதிர்பாராத நேரத்தில் சாந்தியின் வீட்டிற்குச் சென்று, அவரோடு இருந்த ஸ்ரீதேவி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி இருவரையும் உயிரோடு எரித்துக் கொல்ல முயன்றாராம்.. இவ்வளவையும் போலீசாரிடம் முத்து வாக்குமூலமாக சொல்லி உள்ளார்..

    Advertisement

    இந்த மிரள வைக்கும் சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் முதியவர் முத்துவிடம் மேலும் பல கோணங்களில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் 2 பெண்களும் சீரியஸாக உள்ளார்களாம்..!!

    தூய்மைப்பணியாளர்

    பாலையம்பட்டி அருந்ததியர் காலனியில்தான் சாந்தி வசித்து வருகிறார்.. கோபாலபுரத்தில் தூய்மைப்பணியாளராக பணிபுரிகிறராம்.. ஸ்ரீதேவி என்பவர் இவரது சொந்த சகோதரி கிடையாது.. உறவினரான இவரது வீட்டிற்கு சாந்தி வந்துள்ளார். அப்போதுதான் சம்பவத்தன்று விடிகாலை 3 மணிக்கு அங்கு வந்துள்ளார்.. அப்போது வீடு திறந்து கிடந்ததாம்.

    பிள்ளைகள் உள்ளே தூங்குவதால், இரு பெண்களும் திண்ணையில் படுத்துள்ளனர். அப்போது உள்ளே வந்த முத்து, கதவு பகுதி வழியாக வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். தீயை பார்த்ததுமே குழந்தைகள் 2 பேருமே வெளியில் ஓடி வந்துள்ளனர்.. எனினும், இன்னொரு நபர் முத்துவுடன் வந்ததாகவும் சொல்கிறார்கள். இதனால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    English Summary

    Aruppukottai Stunned After Finding Two Sisters Sleeping on Street Veranda at Midnight! What Really Happened?