வித்தை காட்டும் தவெக.. மாயாஜால தவெக அரசு! விஜய் ஆட்சி கொஞ்ச நாளைக்கு தான்! ஆருடம் சொல்லும் கேடிஆர்!

  • விருதுநகர்: செய்யவே முடியாத, நடத்தவே முடியாத திட்டங்களை தேர்தலின் போது விஜய் வாக்குறுதி அளித்ததால் விஜய்க்கு வாய்ப்பு கொடுப்போம் என எல்லோரும் நினைத்த காரணத்தால் விஜய் வெற்றி பெற்றார் எனவும், திமுக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள காட்சிகளை கூட்டு சேர்த்து தவெக ஆட்சி அமைந்துள்ளது, ஆகவே எந்த நேரத்தில் என்ன நடக்கும் என சொல்ல முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

    Advertisement

    ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

    Advertisement

    அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி," விஜய் பெற்றுள்ள வெற்றி நிச்சயமாக நிரந்தரமானது அல்ல, இந்த வெற்றி என்பது கானல் நீர். அதிமுக திமுக வேண்டாம் என நினைக்கும் குறிப்பிட்ட சதவீத வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாக வருபவர்களுக்கு வாக்களிப்பார்கள்.

    கேடி ராஜேந்திர பாலாஜி

    அவ்வாறுதான் வைகோ, விஜயகாந்த், சீமான் ஆகியோர் வரும்போது ஆகியோர்களுக்கு வாக்களித்தார்கள். அப்படித்தான் விஜய் புதிதாக வந்ததால் அந்த வாக்குகள் அவருக்கு சென்றது. விஜய் நடிகராக இருந்ததால் எளிதாக மக்களிடத்தில் சென்றடைந்தார். செய்யவே முடியாத, நடத்தவே முடியாத திட்டங்களை தேர்தலின் போது விஜய் வாக்குறுதி அளித்ததால் விஜய்க்கு வாய்ப்பு கொடுப்போம் என எல்லோரும் நினைத்த காரணத்தால் விஜய் வெற்றி பெற்றார்.

    Advertisement

    தவெக அரசு

    விஜயை நம்பி சென்றனர் மீண்டும் அதிமுகவில் இணைய அனுமதி கேட்கும் காலம் விரைவில் வரும். இன்றைக்கு அமைந்துள்ள ஆட்சி நீடிக்காது, நிலைக்காது, இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி, பல்வேறு கூட்டுக் கட்சிகளின் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள காட்சிகளை கூட்டு சேர்த்து தவெக ஆட்சி அமைந்துள்ளது, ஆகவே எந்த நேரத்தில் என்ன நடக்கும் என சொல்ல முடியாது. அதிமுக தூர்ந்து போன கட்சி என முதல்வர் விஜய் பேசுகிறார், இதுபோன்ற அரசியல் விமர்சனத்தை எல்லாம் கடந்து பழக்கப்பட்ட கட்சி அதிமுக என்பதை வரும் காலங்களில் நிரூபிப்போம்.

    Advertisement

    ஜெயலலிதா

    எம்.ஜி.ஆர் காலத்திலேயே நாஞ்சில் மனோகரன் போன்று உடன் இருந்தவர்கள் குழி பறிப்பதை அதிமுக பார்த்து கொண்டிருந்தது. அதற்குப் பின்னர் அதிமுக ஓய்ந்து போய்விட்டதா இல்லை தூர்ந்து போய் விட்டதா? மீண்டும் எழுந்து வந்து அதிமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா காலத்திலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் அவரிடம் இருந்து வெளியேறி சென்றும் அவர் தொடர்ந்து ஆட்சி அமைத்த வரலாறு உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நான்கரை ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த ஆட்சியை தந்துள்ளார்

    எடப்பாடி பழனிசாமி

    அதிமுக என்றைக்கும் பொலிவை இழக்கவில்லை. தவெக-விற்கு வாக்களித்தவர்கள் வேட்பாளர் யாரையும் பார்க்காமல், எதையும் பார்க்காமல் ஒன்னுமே தெரியாமல் செலுத்தியுள்ள வாக்குகள் அனைத்தும் செல்லலாத வாக்குகளாகவே பார்க்க வேண்டும். ஆனால் வாக்களித்த மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெற்றி பெற்றுள்ள தவெக எம்.எல்.ஏக்களை பார்த்து மக்கள் யாரும் பேசுவதுமில்லை, மரியாதை கொடுப்பதுமில்லை, ஏனென்றால் அது ஒரு கானல் நீர் .

    Advertisement

    எம்.எல்.ஏ. ராஜினாமா

    நாம் குளத்து நீர், தவெக சுனாமி. சுனாமியில் வெற்றி பெற்றவர்கள் என்றைக்கும் நிலையாக நிற்க முடியாது
    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஏற்பட்ட சோதனை காலத்தில அவர்களுடன் இருந்த தலைவர்கள் எல்லோரும் வெளியேறினார்கள். இதே நிலை இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை விட்டு சென்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் எம்.எல்.ஏ., ஆக முடியுமா?அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்றுதான் அவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள்.

    இரட்டை இலை

    அந்த வாக்குகளை வாங்கிய இவர்கள் ராஜினாமா செய்தால் மக்கள் உங்களுக்கு இனிமேல் வாக்களிக்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும். அதிமுகவின் தொண்டர்கள் யாரும் இடப்பெயர்ச்சி ஆகவில்லை. அங்கே சென்று மணல் அள்ளி விடலாமா, கல்லை அள்ளி விடலாமா, போஸ்டிங் போட்டு விடலாமா என லாப நோக்கத்தோடு சென்றுள்ளவர்களைப்பற்றி அவர்களுக்கும் தெரியும்.
    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைய வேண்டும், இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவர் கூட அணி மாறவில்லை"என்றார்.

    English Summary

    AIADMK leader KT Rajendra Balaji claims the TVK-led government is unstable and questions its long-term survival.