திமுகவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்.. உருவ கேலியை தவிர்த்து விவாதம் செய்ய ரெடியா?

  • விருதுநகர்: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெகவின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளது. அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடு குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன, தமிழகத்திற்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சிகளும், தொழில்துறையினரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் உருவ கேலியை விட்டு என்னுடன் அமர்ந்து கொள்கை பற்றி விவாதிக்க முடியுமா என்று கீர்த்தனா சவால் விடுத்துள்ளார்.

    Advertisement

    விருதுநகரில் நடந்த தவெக நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "திமுகவின் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுகிறார். உங்கள் வீட்டில் உள்ள தங்கையை முடக்குவதற்காக டெல்லியில் அமரவைத்துள்ளனர். உங்கள் வீட்டில் உள்ள பெண்மணிக்கே நீங்கள் எவ்வளவு டார்ச்சர் கொடுக்கறீர்கள். எதிர்க்கட்சியினர் இன்னும் திருமண நிகழ்ச்சிகளிலும், ஒவ்வொரு மேடையிலும் கதறி கொண்டே இருக்கிறார்கள்.

    Advertisement

    திமுகவினருக்கு சவால்

    அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அவ்வளவு கதறல் இருக்கிறது. அதனால் தான் வீடு வீடாக மேடை மேடையாக கதறுகிறார்கள். எப்போது நிறுத்த போகிறார்கள் என்பது தெரியவில்லை. சென்னை மேயர் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு. அதில் எவ்வளவு அழகான அமைச்சர்கள் இருந்துள்ளார்கள். அந்த பொறுப்பில் இருந்தவர்கள் காரை பிடித்து தொங்கி செல்வதும், இன்னொருவருக்கு குடை பிடித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு எங்களை பார்த்து கத்துகிறார்கள்.

    விமர்சனத்தை விட்டுட்டு, உருவ கேலியை விட்டு கொள்கை பற்றி எங்களிடம் பேச உட்காருங்கள். நான் சவால் விடுகிறேன். என் அருகில் வந்து அமருங்கள். கொள்கை பற்றி அமர்ந்து பேசு முடியுமா. பெண்கள் முன்னேற்றம் குறித்து மற்றும் பல கட்சியினர் பேசுகிறார்கள். 70 வருடங்களாக பெண்கள் முன்னேற்றத்தை பேசி ஏமாற்றி கொண்டிருந்தனர். எத்தனை பேருக்கு அங்கீகாரம் வழங்கினார்கள். தவெக ஆட்சியில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.

    Advertisement

    பெண்கள் முன்னேற்றம்

    சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக இன்றைக்கு சட்டமன்றத்தின் செயலாளர் ஒரு பெண். பெண்கள் முன்னேற்றத்தை வெட்டி பேச்சுக்கு மட்டும் தான் முன்பிருந்தவர்கள் பயன்படுத்தினார்கள். பெண்களுக்கு கவுன்சிலர்களாக வாய்ப்பு வழங்குவார்கள். அவர்களின் எண்களுக்கு அழைத்தால் அவர்களின் கணவர் தான் எடுப்பார்கள். பெண்கள் முன்னேற்றத்தை நம் ஆட்சியில் மட்டும் தான் பெண்கள் உரிமையை சாதித்து காட்டியுள்ளோம். பெண்களுக்கு உரிமை கொடுத்து அழகு பார்ப்பது முதல்வர் ஜோசப் விஜய் மட்டும் தான். திமுகவில் உள்ள பெண்கள் தங்களுக்கு எங்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அங்கு செல்லுங்கள்" என்றார்.

    English Summary

    Minister Keerthana: Minister Keerthana said, Apart from body shaming, is DMK and other opposition parties ready to debate about policy.