அப்பாவும் பையனும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசுகிறார்கள்.. அவர்தான் கொள்கை தலைவரா.. கீர்த்தனா

  • விருதுநகர்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆட்சி தொடர இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. தங்கள் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால், தவெகவுக்கு பதிலடி அதிமுக வேகம் காட்டுகிறது. திமுகவும் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தவெகவினரை உருவ கேலி செய்வதாக விமர்சனமாகியுள்ளது. இந்நிலையில் ஸ்டாலினும், உதயநிதியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசி வருவதாக அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

    Advertisement

    விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அது அனைவருக்கும் தெரியும். களத்தில் எங்கே போனாலும் முதலமைச்சரை மக்கள் பாராட்டுகிறார்கள். 5 மாதங்களில் நிறைய வெற்றி பயண திட்டங்களை அறிவித்துள்ளோம். அது நல்ல செயல்பாட்டில் உள்ளது.

    Advertisement

    சிவாஜிகிருஷ்ணன் கொள்கை தலைவர்

    மக்கள் ரொம்ப விரும்புகிறார்கள். இந்த மாற்றத்தை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். தாராபுரம், மதுராந்தகத்தில் தவெகவின் வெற்றி உறுதி. எங்கள் வேட்பாளர்களுக்கு செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு இருப்பதை போல ஒரு பிம்பத்தை கட்டமைக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. 10 அமைச்சர்கள் களத்தில் சென்று பார்க்கிறோம். எங்கள் ஆட்சிக்கு மக்கள் பயங்கரமாக வரவேற்பு கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கட்டுக்கதைகளுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல மாட்டோம்.

    அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெக வந்ததால் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். எங்கள் கட்சியில் வேட்பாளர் முதலமைச்சர் தான். 234 தொகுதிகளிலும் நான் தான் நிற்கிறேன் என்று முதலமைச்சர் கூறினார். அது தான் நடக்கிறது. இந்த 2 தொகுதிகளிலும் அவர் தான் வேட்பாளர். திமுகவின் கொள்கை தலைவர்களாக பெரியார், அண்ணா போன்றவர்களை வைத்திருந்தனர். இன்றைக்கு அதை தூக்கி போட்டுவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை வைத்து கொள்ளலாம்.

    Advertisement

    அப்பாவும், மகனும்

    அந்த நிலையில் தான் அப்பா, பையன் இருவரும் பேசுகிறார்கள். அரசு திட்டங்கள், செயல்பாடுகளில் குற்றச்சாட்டுகளை வைத்து கொண்டே தான் இருப்பார்கள். நாங்கள் ஏதாவது தவறு செய்தால் அதை திருத்திக் கொள்வோம். மக்களுக்கு செய்ய கூடிய அரசாக தான் உள்ளோம். ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்போம். களத்தில் ஆய்வு செய்து கனிம வளம் எடுப்பதை சீரமைப்போம். ஊடகத்தில் இருப்போர் சமூக ஊடகத்தில் இருப்பதை படித்து வந்து பேச கூடாது.

    தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வாக்காளர்களுக்கு காசு கொடுப்பதாக வந்த தகவல் தவறானது. புகார் சொல்பவர்கள் எதையும் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். நீண்ட கால கோரிக்கை கூட நிறைவேற்றுகிறோம். இதன் மூலம் பட்டாசு தொழிலே அமோகமாக இருக்க போகிறது" என்றார்.

    English Summary

    Minister Keerthana said that Stalin and Udhayanidhi stalin speaking like Sivaji Krishnamoorthy. TVK will win in the by election.