அடுத்த கட்டுக்கதையிலாவது நல்ல அதிர்ஷ்டம்.. அமைச்சர்கள் கீர்த்தனா ஜெகதீஸ்வரி இணைந்து சூப்பர் செல்பி


  • விருதுநகர்: அண்மையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண் அமைச்சகர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்படி ஊடகங்கள் செய்தி வெளியிட காரணம் இல்லாமல் இல்லை.. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் எம்எல்ஏவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான ஜெகதீஸ்வரி, அரசு விழா ஒன்றில் தனது பெயரை முதலில் போடாமல், அமைச்சர் கீர்த்தனா பெயரை போடப்பட்டிருந்ததால் அப்செட் ஆகி கலெக்டரையே கேட்டார். இதுதான் விவாதமாக மாறியது. ஆனால் ஊடகங்களின் வாயை மூட வைப்பதற்காக அமைச்சர் கீர்த்தனா, அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகிய இருவருமே இணைந்து செல்பி போட்டோ எடுத்து போட்டுள்ளனர்.

    Advertisement

    முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக ராஜபாளையம் எம்எல்ஏ ஜெகதீஸ்வரி உள்ளார். அதே விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா (சிவகாசி எம்எல்ஏ) தொழில்துறை அமைச்சராக உள்ளார். இதில் விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஜெகதீஸ்வரி பணியாற்றி வருகிறார்.

    Advertisement

    விருதுநகரில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா கடந்த ஜூன் 26ம் தேதி நடந்தது. விழாவுக்கான மேடைப் பதாகையில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.

    இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரான தனது பெயரை முதலில் போடாமல் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டதற்கு ஜெகதீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் எனது பெயரே முதலில் வர வேண்டும். அரசு நிகழ்ச்சி நடந்த மேடையிலேயே விருதுநகர் ஆட்சியரிடம் தனது எதிர்ப்பை நேரடியாகவே வெளிப்படுத்தினார்.

    Advertisement

    "ப்ரோட்டகால் தெரியாதா? பல முறை சொல்லியாச்சு?" என அதிகாரிகளிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கடிந்து கொண்டார். அப்போது, "இனி இப்படி நடக்காது" என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சமாதானப்படுத்தினார். அப்போத விருதுநகர் ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கோபமாக பேசிய வீடியோக சமூக ஊடகங்களில் பரவியது.

    இதையடுத்து அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கும், கீர்த்தனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் ஊடகங்களில் பரவின. அமைச்சர் கீர்த்தானாவிற்கு முன்னிலை தருவதை ஜெகதீஸ்வரி விரும்பவில்லை என்றும், யார் பெரிய ஆள் என்பதில் இருவருக்கும் போட்டி இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகளை பரப்பின. இதையடுத்து ஊடகங்களின் வாயை மூட வைப்பதற்காக அமைச்சர் கீர்த்தனா, அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகிய இருவருமே இணைந்து செல்பி போட்டோ எடுத்து போட்டுள்ளனர். அடுத்த கட்டுக்கதையிலாவது நல்ல அதிர்ஷ்டம் அமையட்டும் ( (Better luck with the next fiction) என்று அமைச்சர் கீர்த்தனா கேப்சன் போட்டு இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை.. நாங்கள் நல்ல தோழிகள் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

    Advertisement

    ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு, இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு, என்னென்ன தேவைகள் அண்ணனை (விஜய்) கேளுங்கள் என்பதாக தவெக தலைமை பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்துள்ளது. ஆனால் பொதுவெளியில் பேசும் போதும், பொதுவெளியில் நடந்து கொள்ளும் விதத்திலும் தவெக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் இன்னும் கூடுதல் கவனத்துடனுடன், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று தவெக ஆதரவாளர்களும், பொதுமக்களுமே கோரிக்கை வைத்துள்ளனர்..

    Topics: #keerthana #tvk

    English Summary

    "Better luck with the next fiction..." Ministers Keerthana and Jagadeeshwari pose together for a super selfie.