தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது.. விருதுநகரில் கரைபுரண்டோடும் லஞ்சம்.. கடுப்பான கீர்த்தனா

  • விருதுநகர்: கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து மொத்த நாட்டையும் தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். யாராவது லஞ்சம் கேட்டால் என்னுடைய பெயரை சொல்லுங்கள் என்றும் அறிவித்தார். அதையும் மீறி லஞ்சம் இருந்து கொண்டிருக்கிறது. விருதுநகரில் பட்டாசு கடைக்கு லஞ்சம் கேட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவறு செய்த யாரும் தப்ப முடியாது என அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே சுப்புராஜ் என்கிற மாற்றுத்திறனாளி உள்ளார். அவர் பட்டாசுக் கடை வைக்க முயற்சித்தார். தீயணைப்புத்துறையிடம் தடையின்மை சான்றிதழ் பெற அணுகியபோது, செந்தூர்பாண்டியன் என்கிற அலுவலர் லஞ்சம் கேட்டு அலைக்கழித்தார். இதுகுறித்து சுப்புராஜ் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "நான் வாடகை வீட்டில் இருக்கிறன். 60 சதவிகிதம் மாற்றுத்திறனாளியாக உள்ளேன்.

    Advertisement

    யாராக இருந்தாலும் நடவடிக்கை

    என் உடன்பிறந்தவர்கள் இணைந்து பட்டாசு கடை கட்டி கொடுத்தனர். உரிமம் வாங்க சென்றால் தீயணைப்புத்துறை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் லஞ்சம் கேட்கிறார்கள். என்ன செய்தென்று தெரியவில்லை. ஒவ்வொருவராக போன் போட்டு கேட்கிறார்கள். எப்படி உரிமம் வாங்குவேன் என்று தெரியவில்லை. எனக்கு உரிமம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்த வீடியோ வைரலானது. இதுகுறித்து துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் செந்தூர்பாண்டியன் சுப்புராஜிடம் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதையடுத்து செந்தூர் பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை பகிர்ந்து அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும். லஞ்சம் குறித்து தெரிந்தால் Whats App Number (+91 70103 27687) எண்ணில் புகார் தெரிவியுங்கள். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Minister Keerthana said, People can complaint about Bribe. We will take action if anyone who involved mistake.