விருதுநகர்: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. வரவேற்கத்தக்க சில மாற்றங்கள் இருந்தாலும் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மீது விமர்சனங்களும் இருக்கின்றன. இந்நிலையில் தான் கோட் போட்டு வீடியோ போட்டதற்கு பல்லை பாரு, மூஞ்சியை பாரு என்று ஏளனமாக பேசியதாக அமைச்சர் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, "கோட் போட்டு ஒரு வீடியோ போட்டதற்கு எத்தனையோ பேர் ஏளனமாக பேசி சிரித்தனர். ஏன் நாங்கள் எல்லாம் கோட் போடக்கூடாதா என்று தலைவர் சொல்லியுள்ளார். கோட்ட போட்டு வீடியோ வெளியிட்டதற்கு பல்லை பாரு, மூஞ்சியை பாரு என்று சொன்னார்கள். அதையும் தாண்டி கடந்த மூன்று மாதங்களில் பல சாதனைகளை படைத்தோம்.
வெற்றி தமிழ்நாடு என்கிற ஒரே முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டை கொண்டு வந்துள்ளோம். ஒரு லட்சம் இளைஞர்கள் வேலை பெற போகிறார்கள். விருதுநகரில் 2 பெரிய நிறுவனங்கள் ரூ.1,600 கோடி முதலீட்டில் வரப்போகிறது. இதுதான் நம் முதலமைச்சர் இளைஞர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கை. இதே நம்பிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும். வெற்றி தமிழ்நாட்டில் 15,000 முதல் 25,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலை தான் அதிகம். ஹை எண்ட் ஜாப் என்றால் என்ன. இங்குள்ள இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதில்லை. தமிழகத்தில் ஜிசிசி மிகவும் குறைவு. ஐடி நிறுவனங்கள் மிகவும் குறைவு. இந்த பக்கம் அதை கொண்டு செல்வதற்காக தான் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு நடத்தி 20 இளைஞர்களுக்கு ஹை எண்ட் ஜாப் கொடுத்தோம். அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆண்டுக்கு 6 முதல் 12 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும் வேலை கொடுத்துள்ளோம். சாதாரண வேலை வாய்ப்பு கொடுப்பது நம் நோக்கமல்ல. ஹை எண்ட் ஜாப் கொடுப்பது தான் நம் நோக்கம். எங்களின் திறனுக்கு தகுந்த வேலையை கொடுப்பது முதலமைச்சரின் கனவு. பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிக வாய்ப்புகளை கொடுப்பது அவரின் கனவு. அதை நாம் நிறைவேற்ற வேண்டும். நமக்கு நிறைய பொறுப்புகள் உள்ளது. நம்மை சுற்றி நிறைய வதந்திகள் உருவாகலாம். சொல்ல அல்ல செயல் என்கிற பாதையில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். ஒரே மாநாட்டில் இவ்வளவு பெரிய முதலீட்டை இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்ததில்லை. மூன்றே மாதங்களில் அதை செயல்படுத்தியுள்ளோம். என்ன ரூமர் கிளம்பினாலும் மக்களுக்கு பணி செய்ய வந்துள்ளேன் என்று முதலமைச்சர் அமைதியாக பணியை கவனிக்கிறார். செயலில் நிரூபித்து வருகிறார். அந்த வழிமுறைகளை நானும் கடைபிடிக்க நினைக்கிறேன். வேலை வாய்ப்பை கொடுப்பதுடன் நிற்காமல், நீங்கள் 4 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக வேண்டும். அதற்கான பல விஷயங்களை நாம் செய்வோம்" என்றார். ஏஐ, சேட் ஜிபிடி வந்துவிட்டது. பலர் ஐஐஎம்மில் படிக்க ஆசைப்படுவீர்கள். ஐஐஎம், ஐஐடி படிப்புகளை ஸ்வயம் என்கிற தளத்தில் இலவசமாக படிக்கலாம். அது மத்திய அரசின் இணையதளம். நிறைய இலவச சர்டிபிகேட் வந்துவிட்டது. உங்களின் திறனை நீங்கள் வளர்த்து கொண்டே இருந்தால் போட்டித்திறனான உலகில் நீடிக்க முடியும். வளர்ச்சிக்கு தகுந்தபடி விதிகளில் மாற்றம் முன்னெடுப்பு செய்யப்படுகிறது என்றார்.ஹை எண்ட் ஜாப்
தொழில்முனைவோராக
போட்டிக்கு