சிவகாசியில் களத்தில் இறங்கும் திமுக.. பட்டாசு ஆலைகளை நசுக்குவதாக தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

  • விருதுநகர்: சிவகாசியில் சிறு பட்டாசு ஆலைகள் மூடலால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் வரும் 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையில் செயல்படும் தவெக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, வரும் 16 ஆம் தேதி தி.மு.க சார்பில், சிவகாசி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், "விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும், லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவரும் பட்டாசு உற்பத்தி தொழிலை முடக்கும் வகையில், ஆய்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தவெக அரசின் தொழில் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    Advertisement

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள்/நிர்வகாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    With thousands of workers in Sivakasi having lost their jobs due to the closure of small-scale firecracker factories, the DMK has announced a protest condemning the TVK government. It has been announced that the protest will take place on the 16th, led by former DMK Minister Thangam Thennarasu.