இரவில் தொடர்ந்து கரண்ட் கட் ஆகிறது.. அமைச்சர் ஜெகதீஷ்வரி நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பதறிய தவெக!

  • விருதுநகர்: ராஜபாளையத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பொதுமக்கள் தொடர் மின்வெட்டு தொடர்பாஜ்க வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று அதிகாரிகள் சொல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்ட சூழலில், அக்கட்சி எம்எல்ஏ-க்கள் இப்போது தான் மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ஜெகதீஷ்வரி ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தை நடத்தினார். ராஜபாளையம் தொகுதியில் ஜெகதீஸ்வரி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    Advertisement

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர் என்பதால், ஜெகதீஷ்வரிக்கு உடனடியாக அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அமைச்சரான பின் அதிகமாக சர்ச்சைகளில் சிக்கியது ஜெகதீஷ்வரி தான். முதலில் தன்னுடைய பெயருக்கு மேல் அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் ஏன் அரசு நிகழ்ச்சியில் போடப்பட்டது என்று மாவட்ட ஆட்சியரிடம் மேடையிலேயே கேட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

    இதன்பின் ஜெகதீஷ்வரியின் ஆடியோ ஒன்று லீக்காகியது. கட்சி நிர்வாகி ஒருவரை ஜட்டியோடு அடித்து ஓடவிடுவேன் என்று அவர் பேசியவை தவெகவினரையே அதிர்ச்சி அடைய செய்தது. இதன்பின் சட்டசபையில் ஜெகதீஸ்வரியின் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தப்புத் தப்பாக பதில்களை அளித்து முதல்வர் விஜய்யை திரும்பி பார்க்க வைத்தார்.

    Advertisement

    இந்த நிலையில் ராஜபாளையத்தில் நடந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்திலும் பொதுமக்கள் மின்சார பிரச்சனை தொடர்பாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஜெகதீஷ்வரி பேசுகையில், உங்களால் தான் இப்போது அமைச்சராக இங்கு நிற்கிறேன். நீங்கள் இல்லாமல் எதுவும் நடந்திருக்கிறது. அதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கிருந்த மக்கள், இரவில் 12 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு 12.30 மணிக்கு வருகிறது. நேற்று இந்த நேரத்தில் இதே இடத்தில் கரண்ட் போனது. அமைச்சர் வருகிறார் என்றதும் இன்று மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. மின்சார அலுவலகத்தில் கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று கூறுகிறார்கள். யாரிடம் சென்று பேச சொல்கிறீர்கள். அமைச்சரிடம் புகார் அளிக்க சென்றால், கட்சியினரே தள்ளிவிடுகிறார்கள் என்று கூறினர்.

    English Summary

    TVK: Rajapalayam Residents Challenge Minister Jegadeshwari Over Nighttime Power Outages