வாஷிங்டன்: 2026ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு ஹென்றி பி.ககன் மற்றும் கென்சோ சோய் என இரண்டு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து உயிர் உருவான விஷயத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த மர்மத்திற்கு விடை கண்டுபிடித்திருக்கின்றனர்.
தலைவலி தொடங்கி உடல் உபாதைகள் அனைத்துக்கும் நாம் மருந்துகளை எடுக்கிறோம். ஆனால், இதில் சில மருந்துகள் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு 'தாலிடோமைடு' என்கிற மருந்து ஏற்படுத்திய பாதிப்பை பார்ப்போம்.
1950களில் கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி ஏற்படுவதை தவிர்க்க இந்த மருந்து கொடுக்கப்பட்டது. வாந்தி என்னவோ நின்றுவிட்டதுதான்.. ஆனால், இந்த மருந்தை எடுத்துக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கை, கால்கள் சரியாக வளராமல் பிறந்தன. இப்படி ஆயிரக்கணக்கான குழந்தைகள் மாற்று திறனாளியாக பிறந்தனர். இன்னொரு உதாரணம் எதாம்புடால் மருந்து. இது காச நோய்க்கு கொடுக்கப்படும் மருந்தாகும். சாப்பிட்டால் காசநோய் குணமாகும். ஆனால், இதே மருந்து கண்களில் உள்ள ஆப்டிக் நரம்புகளை பாதித்து நிரந்த பார்வை இழப்பை ஏற்படுத்தும். இப்படி ஏன் நடக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் இரண்டு விஷயத்தை அவர்கள் புரிந்துக்கொண்டார்கள். உடல் என்பது நிறைய பூட்டுகள் கொண்ட ரத்தமும், சதையும் கொண்ட ஜீவனாகும். இதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய பூட்டுக்கு ஏற்ற சாவி வேண்டும். ஆனால், மருந்துகளில் 50-50 சாவிதான் இருக்கும். அதாவது மருந்தில் ஒரு பாதி.. பூட்டுடன் சரியாக சேர்ந்து வேலை செய்யும். இன்னொரு பாதி இன்னொரு பூட்டுக்குள் போய் சேராமல் அந்த பூட்டையே உடைத்துவிடும். இது முதல் விஷயம். இரண்டாவது விஷயம் என்னவெனில், ஆய்வகங்களில் உருவாக்கும் எந்த மருந்துக்கும் 50-50 என இரண்டு சாவிகள் இருக்கும். ஒரு சாவியை மட்டும் கொண்ட..100% மருந்தை உருவாக்கவே முடியாது. கடந்த 100 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் இந்த விஷயத்தில் தான் மண்டை போட்டு குழப்பிக்கொண்டிருந்தனர். அவர்களின் கேள்வி ரொம்பவும் சிம்பிள் மருந்துகள், உணவுகள், குடிநீர் இப்படி அனைத்து மூலக்கூறுகளும் 50-50ஐ கொண்டிருக்கும்போது அதை ஏற்கும் மனிதன் மட்டும் ஏன் 100%ஐ கொண்டிருக்கிறான்? இந்த பூமியில் கிடைக்கும் பொருட்களிலிருந்துதான் மருந்துகளும், உணவுகளும் உருவாக்கப்படுகின்றன. அது எப்படி மனிதர்களுக்கு சேராமல் போகிறது? என்று ஆய்வு செய்து வந்தனர். இந்த கேள்விக்குதான் ஹென்றி பி.ககன் மற்றும் கென்சோ சோய் என இரண்டு விஞ்ஞானிகளும் பதிலை கண்டுபிடித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் உலகத்தில் உயிர்கள் உருவாகும்போது அது 50-50 என்றுதான் உருவானது. ஆனால், ஏதோ ஒரு கட்டத்தில் இந்த உருவாக்கத்தில் குறுக்கீடு நடந்திருக்கிறது. விண்வெளியிலிருந்து வந்து விழுந்த கல்லிலிருந்து வெளியான ரேடியேஷனாக இருக்கலாம்.. அல்லது பூமியின் காந்த புலனாக இருக்கலாம். ஏதோ ஒன்று நடந்து மொத்தமும் மாறிவிட்டது. இந்த மாற்றத்தை புரிந்துக்கொள்ள.. நமது இடது கையை எடுத்து வலது கையின்மேல் வைத்து பாருங்கள். அது பொருந்தாது. காரணம் ஆரம்பத்தில் 50%லிருந்து வெறும் 1% அதிகரித்து 51-49% என்று மாறியது. இப்படி மாறி, மாறி கடைசியில் 100% மனிதராக நாம் பரினமித்துள்ளோம். இந்த 100% உடலுக்கு 100% மருந்தை தயாரிப்பதுதான் சிக்கலாக இருந்தது. இந்நிலையில் தற்போது விஞ்ஞானிகளான ஹென்றி பி.ககன் மற்றும் கென்சோ சோய் ஆகியோர் ஆய்வகத்தில் மருந்து தயாரிப்பில் 50%லிருந்து 51, 52 என செயற்கையாக மாற்றத்தை ஏற்படுத்தி 100% சரியான மருந்தை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி எனில், இனி மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் தடுக்கப்படும். இதற்காகத்தான் இந்த விஞ்ஞானிகளுக்கு தற்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.மருந்துகளும் பக்கவிளைவுகளும்
விஞ்ஞானிகளுக்கு சவால்
100 ஆண்டுகால போராட்டம்
விடை சொன்ன விஞ்ஞானிகள்
நோபல் பரிசு அறிவிப்பு