காலையில் குறைந்து.. மாலையில் எகிறிய கச்சா எண்ணெய் விலை! அடங்காத அமெரிக்கா!

  • வாஷிங்டன்: ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து போட்டிருந்தார். இதனால் சர்வதேச அளவில் இன்று காலை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. ஆனால், அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய சுவிட்சர்லாந்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் மாலை மீண்டும் விலை அதிகரித்திருக்கிறது.

    Advertisement

    சும்மா கிடந்த ஈரானை இழுத்து போருக்குள் விட்டது இஸ்ரேல்தான். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்திருந்தது. அப்புறம் என்ன? போர் வந்தவுடன் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி சப்ளை கட் ஆகிவிட்டது. டிமாண்ட் அதிகரித்ததால், இந்தியா உட்பட உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    ஒப்பந்தத்தில் கையெழுத்து

    இப்படியே போனா.. உலகம் தாங்காது என்று உணர்ந்த சர்வதேச நாடுகள், போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுக்கு அழுத்தம் தர, ஒரு வழியாக அமைதி ஒப்பந்தத்திற்கு ஓகே சொன்னார் டிரம்ப். நேற்று இந்த ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து போட்டிருந்தார். அதேபோல ஈரான் அதிபரும் டிஜிட்டல் கையெழுத்தை போட்டு பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். உண்மையில் உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் வர்த்தகர்கள் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்த தருணம் எனில், அது இதுதான்.

    இயல்பு நிலை

    ஒப்பந்தம் காரணமாக இன்று காலை கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஒரு பேரல் 77.96 அமெரிக்க டாலராக சரிந்தது. கடந்த சில மாதங்களாக போக்குவரத்து இல்லாமல் இருந்த, உலக எண்ணெய் வர்த்தகத்தின் மிக முக்கிய நீர் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது. கப்பல்கள் ஹாயாக பயணித்தன. குவைத் நாடு தனது அவசரக்கால கட்டுப்பாடுகளை நீக்கியது. அதேபோல ஈராக் மீண்டும் தனது எண்ணெய் உற்பத்தியை தொடங்கியது.

    Advertisement

    அமைதி ஒப்பந்தம்

    எல்லாம் சரியாகதான் போய்க்கொண்டிருந்தது என்று நினைத்த நேரத்தில்தான், அந்த சம்பவம் நடந்தது. அதாவது அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய சுவிட்சர்லாந்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தைகள் திடீரென கேன்சல் செய்யப்பட்டன. அப்புறம்தான் இது நிரந்தர போர் நிறுத்தம் கிடையாது, வெறும் தற்காலிக நிறுத்தம் மட்டும் என்பதை மொத்த உலகமும் உணர்ந்தன. குறிப்பாக எண்ணெய் வர்த்தகர்களுக்கு ஒரு நிமிடம் ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது.

    கச்சா எண்ணெய் விலை

    ஏன்னா.. இந்த அமைதி ஒப்பந்தத்தை நம்பி, இஷ்டத்துக்கும் பங்குகளை விற்றிருந்தனர். பிறகு வேறு வழியின்றி விற்ற பங்குகளை எல்லாம் அவசர அவசரமாக வாங்க.. கச்சா எண்ணெய் விலை 78.31 டாலராக உயர்ந்துவிட்டது. மறுபுறம் லெபனானில் ஹிஸ்புல்லா படை மீது இஸ்ரேல் குண்டு போட்டது. பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் மத்திய கிழக்கு பரபரப்படைந்தது.

    Advertisement

    காரணம் அமெரிக்காதான்

    சுவிட்சர்லாந்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை கேன்சல் ஆக அமெரிக்காதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னரும், லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதை அமெரிக்கா கை கட்டி வேடிக்கை பார்த்தது. அதேபோல, அணுசக்தி பிளானை முழுசா அமெரிக்காவிடம் கொடுக்க ஈரான் மறுத்துவிட்டது. இதனால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

    English Summary

    Oil: US President Trump had signed a peace agreement aimed at ending the conflict involving Iran. Consequently, crude oil prices dropped internationally this morning. However, the talks scheduled to take place in Switzerland to finalize the peace agreement were abruptly cancelled, causing prices to rise again by the evening.