வாஷிங்டன்: நாம் ஏஐ யுகத்தில் இருக்கிறோம். உலகத்தில் ஏஐ இல்லாத துறைகளே இல்லை. ஏஐ மனிதரிகள் வேலையை பறிக்கிறது என்பது தான் இதுநாள் வரை பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில் ஏஐ 100 கோடி மக்களை கொல்லும். தவறான நபர்கள் கையில் கிடைத்தால் உலகின் பயங்கரமான ஆயுதம் ஏஐ என்று மைக்ரோஷாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஊடகத்திற்கு மைக்ரோஷாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அளித்த பேட்டி தான் பேன் வேர்ல்ட் வைரல். அந்த பேட்டியில் பில்கேட்ஸ் கூறுகையில், தவறானவர்களின் கைகளில் ஏஐ சிக்கினால் அது 100 கோடி மக்களை கொல்லும். அந்தளவுக்கு சக்தியான ஆயுதமாக மாறும். உலகின் மிகவும் ஆபத்தான ஆயுதமாக ஏஐ மாறியுள்ளது. ஏஐ தொடர்பான நிறுவனங்களில் சுயக்கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் மட்டுமே போதாது. அரசு நிர்வாகமும் இதில் தலையிட்டு கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும்.
தவறான மனிதர்கள் கையில் ஏஐ சிக்கினால், அது மற்ற ஆயுதங்களை விட கூர்மையானதாக, சக்தி வாய்ந்ததாக மாறும். இதற்கு கண்காணிப்பு மிகவும் அவசியம். ஏஐ வளர்ச்சியை பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து ஆலோசிக்க வேண்டும். அரசுகள், சட்ட அமைப்புகள் உள்ளிட்டோர் இதைப்பற்றி அதிகளவு விவாதிக்க வேண்டும். சைபர் அட்டாக், உயிரியல் ஆயுதங்களில் உள்ள அபாயம் குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளேன். சட்டரீதியாக நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும். வரும் காலங்களில் ஏஐ சைபர் அட்டாக், நிதி மோசடி, போலி தகவல்கள் பரவல் அதிகரிக்கும். நிதி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மின்கட்டமைப்புகள், அரசு அமைப்புகள் அதிகம் குறி வைக்கப்படுவார்கள். அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஏஐ மூலம் ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை பெறுவதை எளிதாக்கும் என்று கூறியுள்ளார். மைக்ரோஷாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஏஐ தொழில்நுட்பத்தில் நம்பகத்தன்மை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்க போகிறது என்று கூறியுள்ளார். ஒரே நேரத்தில் மைக்ரோஷாப்ட் நிறுவனத்தின் இரண்டு துருவங்கள் ஏஐ தொடர்பாக எச்சரித்திருப்பது உலகளவில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.சக்திவாய்ந்த ஏஐ
எச்சரிக்கை அவசியம்
பதட்டம்