AI வடிவில் ஏலியன்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் கார்ப்பரேட்கள்!

  • வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) தற்போது புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் சூப்பர் AI-ஐ உருவாக்கி வருகின்றனர். ஆனால், இது வானத்தில் போகும் ஏலியனை வான்டடாக கூப்பிடும் செயல் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கியிருக்கின்றனர்.

    Advertisement

    ஒபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய முன்னணி நிறுவனங்களின் முன்னாள் மூத்த ஆராய்ச்சியாளரான ஜேக்கப் காச்சன், மனித அறிவாற்றலை மிஞ்சிய சூப்பர்-இன்டெலிஜென்ட் AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது என்பது ஏலியன்களை கூப்பிடுவதற்கு சமம் என்று எச்சரித்துள்ளார்.

    Advertisement

    AI-ன் அசுர வளர்ச்சி போக்கு குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கவலை தெரிவித்து நிறுவனங்களில் இருந்து வெளியேறிய நிபுணர்களின் வரிசையில் இவரும் இணைந்தது இந்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்திருக்கிறார். அதாவது AI தொழில்நுட்பங்களை மிகத் தீவிரமாக உருவாக்கி வரும் ஆராய்ச்சியாளர்களே! 2032க்குள் AI மனித குலத்தையே முற்றிலும் அழித்துவிடக்கூடும் என்று தான் நம்புவதாக ஜேக்கப் காக்சன் கூறியுள்ளார்.

    சூப்பர்-இன்டெலிஜென்ஸ் என்பது நம்மால் முழுமையாக புரிந்துக்கொள்ளவோ அல்லது முழுமையாக கட்டுப்படுத்தவோ முடியாத ஒரு வேற்றுக்கிரகவாசியின் மூளை போன்றது. எந்த ஒரு கற்பனையான இக்கட்டான சூழ்நிலையை தாண்டியும் அது இயல்பாகவே அச்சுறுத்தலானது என்று அவர் கூறுகிறார். இவருடைய இந்த எச்சரிக்கை, உலகளாவிய விவாதத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து.. ஆந்தரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய், ஒபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் எக்ஸ்ஏஐ தலைவர் எலான் மஸ்க் ஆகியோர் AI வளர்ச்சியை தற்காலிகமாக மெதுவாக்குவது குறித்து ஆலோசிக்க தொடங்கியிருக்கின்றனர்.

    Advertisement

    என்னதான் இவர்கள் ஆலோசனை நடத்தினாலும், உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. எனவே இந்த நிறுவனங்களிலிருந்து அடுத்தடுத்து ஆய்வாளர்கள் வேலையை விட்டு ராஜினாமா செய்து வருகிறார்கள். பாதுகாப்பு விஷயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை விட.. வணிக ரீதியிலான தயாரிப்புகளை சீக்கிரமாக வெளியிடுவதில்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் தலைவரான மிருணாங்க் சர்மா, உலகம் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும், நிறுவனத்திற்குள் பாதுகாப்பு பணிகளை புறக்கணிக்க அழுத்தம் தரப்படுவதாகவும் கூறி சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார்.

    அதேபோல ஓபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான இல்யா சுட்ஸ்கேவர் மற்றும் சூப்பர் அலைன்மென்ட் குழுவின் இணைத் தலைவர் ஜான் லேக்கி ஆகியோர், பாதுகாப்பு நடைமுறைகள் பின்னுக்கு தள்ளப்பட்டதாக கூறி 2024ல் வெளியேறினர்.

    Advertisement

    இதுமட்டும் கிடையாது.. ஓபன்ஏஐ நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எச்சரித்ததற்காக லியோபோல்ட் அஷென்பிரென்னர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் வெறியேறும்போது.. உண்மைகளை மறைக்க ரூ.8.4 கோடி தருவதாக நிறுவனம் சொன்னது. ஆனால் அதையெல்லாம் உதறிவிட்டு கெத்தாக வெளியேறியிருக்கிறார். இவர்கள் சொல்வது எல்லாம் ஒரே விஷயம்தான்.. ஏஐ நம் கையை மீறி சென்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான் அது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

    Topics: #ai #alien #openai

    English Summary

    AI is an alien species: Artificial Intelligence (AI) technology has currently reached new heights, leading corporate companies to develop "Super AI." However, scientists have begun to warn that this is akin to deliberately inviting extraterrestrials down from the sky.