Aliens: குடியிருப்புகளுக்கு மேலே வானில் பறந்த மர்ம பொருள்! வேற்று கிரகவாசிகளா? மத்திய கிழக்கில் நடந்தது என்ன

  • வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளில் குடியிருப்புகள் மீது மர்மமான முறையில் பந்தை போல உருளை வடிவத்தில் பொருள் ஒன்று அதிவேகத்தில் பறந்ததாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது அண்மையில் பொதுவெளியில் அமெரிக்க அதிகாரிகளால் வெளியிடப்பட்ட UFO தொடர்பான ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய கிழக்கு மேலே பறந்த அந்த மர்ம பொருள் எது? என்பதை தங்களால் உறுதி செய்ய முடியவில்லை என்று ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகளும் தீர்க்கப்படாதது என்ற பட்டியலில் இந்த நிகழ்வை வகைப்படுத்தியுள்ளனர்.

    Advertisement

    மக்கள் வசிக்கும் பகுதியில் அதிவேகமாக அந்த மர்ம பொருள் பறந்து சென்றுள்ளது. அந்த மர்ம பொருள் வழக்கத்திற்கு மாறாக பறந்ததும், அதனை பற்றிய தரவுகளை விரிவாக விவரிக்க முடியவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்னார்.

    Advertisement

    பெண்டகன் வெளியிட்ட புகைப்படங்கள்

    அதாவது, வானில் பறந்தது டிரோனோ அல்லது பலூனா, விமானங்களா அல்லது வேறு ஏதாவது ஆளில்லா பொருட்களா? என அதனை பற்றிய எந்த ஒருதீர்க்கமான முடிவுக்கும் வர முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உண்மையில் அந்த மர்ம பொருள் எது என்று உறுதியாக கண்டறிய முடியவில்லை என்பதால், அதை வைத்து மட்டுமே வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான ஆதாரமாக இதனை எடுத்துக்கொள்ள முடியாது என்று ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    வானில் மர்மமான முறையில் பறக்கும் பொருட்கள் குறித்து ராணுவ சென்சார்கள் மூலம் படம் பிடித்த தரவுகளை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் பல்வேறு தொகுப்புகளாக வெளியிட்டு வருகிறது. இதுவரை 4 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், 5 வது கட்டமாக புதிய தரவுகள் வெளியிடப்பட்டன.

    Advertisement

    ரஷ்யாவின் கருவிகளா?

    உண்மையில் வானில் மர்மமான முறையில் பறந்தது, ரஷ்யா அல்லது சீனா ஆகிய நாடுகளின் அதிநவீன கருவிகளாக கூட இருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அல்லது ரேடார்களில் பதிவாக கூடிய சில இயற்கை தட்பவெட்ப நிகழ்வுகளாக கூட இருக்ககூடும் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.

    வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா?

    வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்களில் வந்ததாகவும், அதை பார்த்ததாகவும் திடீரென்று வெளிநாடுகளில் சிலர் திகில் கிளப்புவதை பார்க்க முடிகிறது. யுஎப்ஓ, ஏலியன்ஸ்கள் குறித்த விஷயங்கள் அவ்வப்பொது சமூக வலைத்தளங்களில் பரவி விவாதத்திற்கு வித்திடும். பூமியை போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதாக ஒரு தரப்பும், சாத்தியம் இல்லை என மற்றொரு தரப்பும் கூறி வருகிறார்கள்.

    Advertisement

    அமெரிக்காவிடம் இதுகுறித்த ரகசிய கோப்புகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில்தான், அது குறித்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், வேற்று கிரகவாசிகள் உண்மையில் இருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் பூமிக்கு வந்து மனிதர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்களா? என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை உறுதியாக இல்லை.

    English Summary

    Aliens: A video has been released showing a mysterious, ball-like, cylindrical object flying at high speed over residential areas in the Middle East. This information came to light through documents regarding UFOs recently made public by US officials.