தரையிறங்கும் போது சறுக்கிய விமானம்! வாகனங்கள் மீது மோதி தீ! அமெரிக்கா ஏர்போர்ட்டில் அதிர்ந்த பயணிகள்

  • வாஷிங்டன்: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசானுக்கு சொந்தமான சரக்கு விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி தீ பற்றியது. இந்த விமான விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தை அடுத்து மியாமி விமான நிலையத்தில் அனைத்து ஓடுதளமும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் பிரைம் ஏர் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தில் இறங்கி வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தை விட்டு இறங்கி அங்கே விமான நிலையத்தின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது.

    Advertisement

    இதில் விமானத்திலன் முன் பகுதியில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஓடுதளத்தை விட்டு இறங்கி சென்றபோதே விமானி விமானத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார். ஆனால் முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தானது நடந்துள்ளது.

    விமான விபத்து தொடர்பாக அமேசான் ஏர் பிரைம் நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த விபத்தை அடுத்து மியாமி விமான நிலையத்தில் உள்ள மற்ற அனைத்து ஓடுதளமும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

    English Summary

    A cargo plane crash at Miami International Airport in the United States has caused shock. An Amazon-owned cargo plane lost control while landing, crashed to the ground, collided with several vehicles, and caught fire. Five people lost their lives in the accident, and reports indicate that three others are in critical condition. Following the crash, it was announced that all runways at Miami International Airport would be temporarily closed.