அடுத்து அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் அமிஷ் ஷா.. வெல்ல வாய்ப்பு இருக்கா? வெளியான தகவல்

  • வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து இரு ஆண்டுகளுக்கு பிறகு மிட் டேர்ம் தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் ஆளும் தரப்பு வென்றால் மட்டுமே நாடாளுமன்றம் அதிபர் கட்டுப்பாட்டில் இருக்கும். எதிர்கட்சிகள் வென்றால் அதன் பிறகு அதிபரால் தான் விரும்பிய சட்டங்களை எளிதாக கொண்டு வர முடியாது. இந்த முக்கியமான மிட் டேர்ம் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினர் குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள மிட் டேர்ம் தேர்தல் நடைபெறுகிறதது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களிலும் முன்கூட்டியே வாக்களிக்கும் ஆப்ஷன் இருக்கும் சூழலில், டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மாநில நாடாளுமன்றம் முதல் உள்ளூர் சட்டசபை வரை பல்வேறு முக்கிய பதவிகளுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

    Advertisement

    இந்திய வம்சாவளியினர்

    டெக்சாஸ் மாகாணத்தின் ஹவுஸ் மாவட்டம் 47ல் ஜனநாயகக் கட்சி சார்பில் பூஜா சேத்தி போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால், டெக்சாஸ் மாகாண சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்து மற்றும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை பெறுவார்.

    அதே மாகாணத்தின் ஹவுஸ் மாவட்டம் 66ல் ஜனநாயகக் கட்சியின் சந்தீப் ஸ்ரீவஸ்தவா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் மாட் ஷஹீன் களமிறங்கியுள்ளார். ஷஹீன், மாகாண சட்டமன்றத்தின் தேர்தல் குழுவுக்கு தலைவராக உள்ளார். 2024 தேர்தலில் அவர் 61.1 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். இதற்கு முன்பு 2024ல் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீவஸ்தவா, குடியரசுக் கட்சியின் கீத் செல்ஃப்பிடம் 37.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    Advertisement

    விவேக் ராமசாமி

    குடியரசுக் கட்சியை சேர்ந்த தொழிலதிபரும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஆமி ஆக்டன் களமிறங்கியுள்ளார். இந்த போட்டி அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதேபோல நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் பதவிக்கு குடியரசு கட்சியின் சரிதா கொமடிரெட்டி போட்டியிடுகிறார். முன்னாள் பெடரல் அரசு வழக்கறிஞரான அவர், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸை எதிர்கொள்கிறார்.

    அமிஷ் ஷா

    அரிசோனா மாகாணத்தின் முதல் தொகுதியில் ஜனநாயக கட்சியின் அமிஷ் ஷா போட்டியிடுகிறார். மருத்துவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அவர், குடியரசு கட்சியின் ஜே ஃபீலியை எதிர்கொள்கிறார். ஜூலை மாதம் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தலில், அமிஷ் ஷா வெற்றி பெற்றார். இந்த சூழலில் தான் அவர் நாடாளுமன்ற தேர்தலிலும் களமிறங்குகிறார்.

    Advertisement

    புளோரிடாவின் 22வது தொகுதியில் ஜனநாயக கட்சியின் பியா தண்டியா போட்டியிடுகிறார். முன்னாள் கல்வியாளரான இவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அவர், குடியரசு கட்சியின் கேசி அஸ்கரை எதிர்கொள்கிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், புளோரிடாவிலிருந்து அமெரிக்க காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெறுவார்.

    மற்ற வேட்பாளர்கள்

    கலிஃபோர்னியாவின் 17-வது தொகுதியில் ஜனநாயக கட்சியின் ரோ கண்ணா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் ரித்தேஷ் டாண்டன் களமிறங்கியுள்ளார். இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் பிரமிளா ஜெயபால் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் நிரவ் ஷேத் களமிறங்கியுள்ளார்.

    Advertisement

    கலிஃபோர்னியாவின் 3-வது தொகுதியில் நீண்ட காலமாக காங்கிரஸ் உறுப்பினராக உள்ள அமி பெரா மீண்டும் போட்டியிடுகிறார். விர்ஜீனியாவின் 10-வது தொகுதியில் சுஹாஸ் சுப்பிரமணியம் தனது பதவியை தக்கவைக்கக் களமிறங்கியுள்ளார்.

    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் நித்யா ராமன்

    கேரளாவில் பிறந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மன்ற உறுப்பினர் நித்யா ராமன், தற்போதைய மேயர் கரேன் பாஸை எதிர்த்து நவம்பர் 3ம் தேதி நடைபெறும் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கான இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Indian-origin candidates are contesting key races in the 2026 US midterm elections(அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் இந்தியர்கள்): US latest news in tamil.