வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே டிரம்பின் மைதானம் அருகே துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு சுற்றி திரிந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் மீது தொடர்ச்சியாக கொலை முயற்சி தாக்குதல்கள் நடந்து வருகிறது. கடந்தாண்டு தேர்தலுக்கு முன்பே கூட அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடந்தது. அந்த தேர்தலை மொத்தமாக புரட்டி போட்டதே அந்த தாக்குதல் தான். அந்தச் சம்பவத்திற்கு பிறகே டிரம்பிற்கான ஆதரவு மளமளவென அதிகரித்தது.
அமெரிக்க அதிபரான டிரம்பின் குடியரசு கட்சி சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், டிரம்பின் கலிபோர்னியா கோல்ஃப் மைதானம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கவச உடைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சில ஆவணங்களை அடங்கிய நோட்டு புத்தகங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 38 வயதான ஜீனின் ஜான் டேலே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் உள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப் அருகே இவர் கைது செய்யப்பட்டார். இவர் கோல்ஃப் மைதானத்தை சுற்றி சுற்றி போட்டோ மற்றும் வீடியோ எடுத்து கொண்டு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவரை பிடித்து போலீசார் கேட்ட போதும் அவர் முன்னுக்கு பின் முரனான தகவல்களையே கூறியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிஃப் போலீசார் தெரிவித்தனர். மேலும், அவரது காரில் சோதனை செய்தபோது, குண்டுகள் முழுமையாக லோட் செய்யப்பட்டிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது பேண்ட் பாக்கெட்டில் தனியாக 16 தோட்டாக்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பல துப்பாக்கிகள், தோட்டாக்கள், கவச உடைகள் மற்றும் மிக கொடூரமான கருத்துகளை கொண்ட புத்தகங்களையும் போலீசார் கண்டறிந்து, அதையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது கொள்ளை, அதிகளவில் தோட்டாக்களை வைத்திருந்தது, அனுமதியின்றி ஷார்ட் கன் வைத்திருந்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர வாகனத்தில் மறைத்து துப்பாக்கியை எடுத்து சென்றதாகவும் சொல்லி, தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜீனின் ஜான் டேலே ஏற்கனவே கொள்ளை வழக்கு ஒன்றில் சந்தேக நபராக இருந்தது தெரிய வந்தது.. அந்த விசாரணையின் போதும் அவர் டிரம்ப் கோல்ஃப் மைதானம் அருகே தான் அவர் சிக்கினார். இப்போது அவர் மீண்டும் அதே இடத்தில் அவர் சிக்கியுள்ளார். அதேநேரம் இந்தச் சம்பவத்தில் சட்ட ஒழுங்கிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு கூட இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. புளோரிடாவில் உள்ள டிரம்பின் கோல்ஃப் கிளப்பில் அவரை கொல்லும் நோக்கத்தோடு ஆயுதம் ஏந்திய ஒருவர் உள்ளே நுழைந்தார். அவரை சரியான நேரத்தில் போலீசார் கைது செய்ததால் மோசமான சம்பவம் தவிர்க்கப்பட்டது. அந்தச் சம்பவத்தை தொடர்ந்து டிரம்பை சுற்றி போடப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.கோல்ஃப் மைதானம்
கைது
அதிரடி சோதனை
டிரம்ப் கொலை முயற்சி