முட்டைகளை விழுங்கிய கோழி? கிட்ட போய் பார்த்தவருக்கு ஷாக்! பாம்பு பவர் இதுதாங்க!

  • வாஷிங்டன்: பண்ணையில் வளர்த்து வந்த கோழி ஒன்று, அது போட்ட முட்டைகளை அதுவே சாப்பிட்டு வந்தாக நினைத்து.. ஆய்வு செய்த ஓனர் அங்கு 5 பாம்புகள் பின்னி பிணைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    Advertisement

    கோழிகள் தாங்கள் போடும் முட்டைகளை அதுவே சாப்பிடுவது ரொம்பவும் ரேரான விஷயம். ஆனால் சில இடங்களில், கோழிகள் கடுமையான ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறது எனில், அவை தன்னுடைய முட்டைகளையே சாப்பிட்டுவிடும். சரி அப்படிதான் நம்ம வூட்டு கோழியும் ரொம்ப பசியா இருந்து இருக்கு போல.. என ஓனர் நினைத்திருக்கிறார்.

    Advertisement

    அதுக்குன்னு எப்பவாச்சும் சாப்பிட்டா பரவாயில்ல.. தினமுமா? தினமும் எப்படி ஒரு கோழி தான் போடும் முட்டையை அதுவே சாப்பிடும் என்று வீட்டுக்காரருக்கு டவுட் வந்திருக்கிறது. எனவே கோழி அடை வைக்கும் பகுதியில் எல்லாதையும் எடுத்து சோதனை செய்து பார்த்திருக்கிறார். பார்த்தவருக்கு ஷாக்.. அங்கு 5 பாம்புகள் ஒன்றாக பிணைந்து படுத்திருக்கின்றன. கோழி போடும் முட்டைகளை ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாம்பு முழுக்கியிருக்கிறது.

    நம்மூரில் விஷமில்லாத சாரை பாம்புகளை போல.. அமெரிக்காவில் கோழி பாம்புகள் என்று ஒரு இனம் இருக்கிறது. இவைகளுக்கு விஷயம் கிடையாது. ஆனால், கோழிப்பண்ணைகளை பார்த்தால்.. தலைவனை கையில் பிடிக்க முடியாது. சர்ரென உள்ளே புகுந்து பதுங்கிக்கொள்ளும். இந்த பாம்புகளால் கோழிகளுக்கு ஆபத்து கிடையாது. ஆனால், கோழி முட்டை ஒன்று கூட மிச்சம் இருக்காது. ஆக திருட்டுக்கோழி இந்த பாம்புகள்தான் என்று அவைகளை அடித்து விரட்டியிருக்கிறார் ஓனர்.

    Advertisement

    வட அமெரிக்காவை பொறுத்தவரை இந்த வகை பாம்புகள் ரொம்பவும் சாதாரணமானவைதான். வேளாண் பண்ணைகளில் பெருச்சாளிகளை கட்டுப்படுத்தவும், பூச்சி, சிறிய பறவைகளை கட்டுப்படுத்தவும் இந்த வகை பாம்புகள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. எனவேதான் அந்த பாம்புகளை பண்ணையின் உரிமையாளர் கொல்லாமல் விட்டுவிட்டார்.

    அதேபோல இந்தியாவிலும் பாம்பு சம்பவம் ஒன்று கவனம் பெற்றிருக்கிறது. அதாவது இமாச்சல் பிரதேசத்தின் மண்டி பகுதியில் விவசாயி ஒருவர் வீட்டில் படுத்திருந்த போது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று உள்ளே நுழைந்திருக்கிறது. விவசாயி இது தெரியாமல் நன்றாக தூக்கத்தில் இருந்திருக்கிறார். காலில் ஏதோ ஊர்வதை உணர்ந்தவர் சட்டென எழுந்து லைட்டை போட.. கட்டுவிரியன் பதறி ஓடியிருக்கிறது. அதே நேரம் காலில் ஏதோ தழும்பு போல இருந்திருக்கிறது.

    Advertisement

    ஆஹா.. பாம்புதான் நம்மை கடித்து விட்டது என்று பயந்த அந்த விவசாயி உடனடியாக மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், பாம்பு ஏதும் கடிக்கவில்ல என்பதை உறுதி செய்தனர்.

    இப்போது மழைக்காலம் தொடங்கியிருக்கிறது. பாம்புகள் சூடான இடத்தை தேடி நகரும். எனவே வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் எடுத்து வீசிவிட்டு.. வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எலிகள் வராது. எலி இல்லை எனில்.. பாம்புகளும் வராது என சூழலியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Suspecting that a hen raised on the farm was eating its own eggs, the owner investigated and was shocked to find five snakes intertwined there.