வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல டைம்ஸ் ஸ்கொயரில் நடந்த பிரபல சர்வதேச வங்கியான பேங்க் ஆஃப் அமெரிக்காவின் துணைத் தலைவரான 32 வயது எரின் பியாகென்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் குழந்தை பெற்றிருந்த அவர், மகப்பேறு விடுப்புக்குப் பிறகு மீண்டும் பணிக்கு திரும்பியிருந்த நிலையில் இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் பகுதி உலகிலேயே மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாகும். அங்கு தான் 32 வயது எரின் பியாகென்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உலகிலேயே மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
எரின் பியாகென்டி சர்வதேச வங்கியான பேங்க் ஆஃப் அமெரிக்காவில் பிஸ்னஸ் செலக்ஷன் பிரிவில் துணை தலைவராக பணியாற்றி வந்தார். ஃபோர்டாம் சட்ட பள்ளியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 2021ஆம் ஆண்டு தனது கணவர் ஃபிராங்க் உடன் இணைந்தே பட்டம் பெற்றார். தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் எரின் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.. அதில் தனது குழந்தையை கவனித்து கொள்வதற்காக பேங்க் ஆஃப் அமெரிக்காவில் 5 மாதங்கள் விடுப்பு கிடைத்துள்ளதாகவும் அதற்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும், திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் அவர் மகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி சில நாட்கள் மட்டுமே நீடித்தது என்பேத சோகத்திலும் சோகம்! நியூயார்க்கின் மிகவும் பரபரப்பான சுற்றுலா மற்றும் கேளிக்கை பகுதிகளில் ஒன்றான டைம்ஸ் ஸ்கொயரில் இந்த தாக்குதல் நடைபெற்றது. கத்தி குத்தில் எரின் உயிரிழந்த நிலையில், 68 வயது ஆண் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணை 49 வயதான பமீலா சிஸ்னெரோஸ் என போலீசார் அடையாளம் கண்டனர். அவரிடம் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாகவும், கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இது தொடர்பாக அவர் போலீசரிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிஸ்னெரோஸின் சகோதரர் பேட்ரிக் பெரால்டா கூறுகையில், "எனது சகோதரிக்கு பல ஆண்டுகளாக மனநல பிரச்சினைகள் இருந்தது. ஆனால் அவர் ஆக்ரோஷமானவர் அல்ல.. ஏற்கனவே எனது சகோதரிக்கு விவகாரத்து ஆகியுள்ளது. அவருக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை மேம்பட்டிருந்தது. மருந்துகளை எடுத்து கொண்டு வேலைக்கும் சென்று வந்தார்" என்றார். சிஸ்னெரோஸ் ஒரு ஷாப்பிங் பையில் இருந்து இரண்டு கத்திகளை எடுத்துள்ளார். முதலில் 68 வயது நபரை கத்தியால் தாக்கிய அவர், பின்னர் எரினை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு போலீசார் அவரை சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவர் கத்திகளை கீழே போட மறுத்ததுடன், போலீசாரை கொல்ல விரும்புவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். போலீசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த அவர் மீது மின்சார துப்பாக்கியை பயன்படுத்தி, அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் நியூயார்க்கின் மிகவும் பாதுகாப்பான மற்றும் அதிக போலீஸ் கண்காணிப்பில் உள்ள பகுதிகளில் ஒன்றான டைம்ஸ் ஸ்கொயரில் நடந்துள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதமும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.யார் இவர்?
படுகொலை
மனநல பிரச்சனைகள்
சரணடைய வலியுறுத்தல்