அமெரிக்காவை சூழும் பேராபத்து.. வளைகுடா பதற்றம்.. உலக பொருளாதார சரிவு.. கடைசியில் உள்நாட்டு போர்!

  • பெய்ஜிங்: 2027ல் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும், உலக பொருளாதாரம் மிக பெரிய சரிவை சந்திக்கும் என்பசு உள்ளிட்ட 5 மிக முக்கியமான கணிப்புகளை சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஜியாங் சூகின் கணித்துள்ளார். "சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்" என்று அழைக்கப்படும் அவர், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

    Advertisement

    சர்வதேச அளவில் பல்வேறு முக்கியமான கணிப்புகளை துல்லியமாக கனித்தவர் நாஸ்ட்ரடாமஸ். 16ம் நூற்றாண்டை சேர்ந்த இவர், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை மிக துல்லியமாக கணித்தவர். அவரை போலவே எதிர்க்காலத்தை துல்லியமாக கணிப்பவர் தான் சீன வம்சாவளியை சேர்ந்த கனடாவின் பேராசிரியர் ஜியாங் சூகின். தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஜியாங், இப்போது சில முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    1. மேற்கு ஆசியப் போர் தீவிரமடையும்?

    ஒரு தவறான வெளியுறவு கொள்கை முடிவு, அமெரிக்காவுக்குள் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறியிருந்தார். அவரது முக்கிய கணிப்புகளில் முதன்மையானது மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதல். ஏவுகணை தாக்குதல்கள் மூலம் போரை முடிக்க முடியாமல் போனால் அமெரிக்கா முழு வீச்சில் தனது ராணுவத்தைப் பயன்படுத்தி படையெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பல ஆண்டுகள் நீடிக்கும் போரில் அமெரிக்கா சிக்கிக்கொள்ளும் என்றும் அந்த போரில் அமெரிக்காவால் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கணித்துள்ளார்.

    Advertisement

    2. மீண்டும் ராணுவ கட்டாய ஆட்சேர்ப்பு?

    போர் காரணமாக அமெரிக்க அரசு கட்டாய ராணுவ ஆட்சேர்ப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஜியாங் கூறியுள்ளார். 2027ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புக்கான சட்டம் உருவாக்கப்படலாம் என்றும் இதன் மூலம் இளம் அமெரிக்கர்கள் ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    3. கடும் கட்டுப்பாடுகள்

    அதேபோல் அமெரிக்காவில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் தீவிரமடையும் என அவர் கணித்துள்ளார். அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அமைப்பான ICEன் அதிகாரங்கள் கணிசமாக விரிவடையும் என்றும் தேசிய பாதுகாப்பு படைகள் முக்கிய பெருநகரங்களில் தொடர்ந்து களமிறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    4. உலகளவில் பொருளாதார நெருக்கடி?

    ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்குவதால் உலகம் முழுவதும் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் அதிகரிக்கும் என்றும் ஜியாங் எச்சரித்துள்ளார். இதனால் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து, உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பொருளாதார நெருக்கடி, கட்டாய ராணுவ சேவைக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை அமெரிக்காவில் கடுமையான உள்நாட்டு அமைதியின்மையை ஏற்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.

    5. அமெரிக்காவில் 'இரண்டாவது உள்நாட்டுப் போர்'?

    மேலே கூறப்பட்ட குழப்பங்கள் எல்லாம் சேர்த்து அமெரிக்காவில் ஒரு உள்நாட்டு போரை உருவாக்கும் என அவர் கூறியிருக்கிறார். 2027ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் வெடிக்க தேவையான காரணங்கள் உருவாகியிருக்கும் என்றும் தொடர்ந்து நடைபெறும் கலவரங்களால் நாடு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    இந்த ஐந்து விஷயங்களையும் அவர் தனித்தனி நிகழ்வுகளாகப் பார்க்கவில்லை. ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே பார்க்கிறார். அதாவது வெளிநாட்டில் நீடிக்கும் போர் ராணுவ கட்டாய ஆட்சேர்ப்பை ஏற்படுத்தும்.. அது உள்நாட்டில் கோபத்தை அதிகரிக்கும்.. இதையடுத்து காவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடையும். அதே நேரத்தில் போர் காரணமாக விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியும் தீவிரமடையும் என்பதே அவரது கணிப்பு!

    English Summary

    Professor Jiang Xueqin, described as China Nostradamus, has made five predictions about the United States in 2027(உலகை உலுக்கும் பகீர் கணிப்புகள்): China Nostradamus predictions latest news in tamil.