மனித கட்டுப்பாட்டை மீறும் AI? டிரம்ப்பை பார்த்து சீன அதிபர் சொன்ன வார்த்தை.. இது ரொம்பவே முக்கியம்

  • வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அது மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான வெள்ளை மாளிகை சந்திப்பின்போது ஏஐ பாதுகாப்பு குறித்து ஜி முக்கியமாக பேசியுள்ளார்.

    Advertisement

    சீன அதிபர் ஜி ஜின்பிங் இப்போது அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்றைய தினம் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு வந்த போது, அதிபர் டிரம்ப் வழக்கத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கே வந்து ஜி ஜின்பிங்க்கை வரவேற்றார். இதுவே டிரம்ப் இந்த பயணத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை காட்டுகிறது.

    Advertisement

    ஏஐ

    அதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பும் நடைபெற்றது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொடர்பாகவே விவாதங்கள் இருந்து வரும் நிலையில், அது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அது மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். மேலும், உலகின் முன்னணி ஏஐ நாடுகளாக சீனாவும் அமெரிக்காவும் இருப்பதால், இந்த தொழில்நுட்பத்தை பொறுப்புடன் உருவாக்கி நிர்வகிக்க வேண்டிய கடமை இரு நாடுகளுக்கும் இருப்பதாக ஜி ஜின்பிங் கூறினார்.

    Advertisement

    மனிதர்கள் கட்டுப்பாட்டு

    அதாவது ஏஐ வளர்ச்சி எப்போதும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.. மக்களின் நலனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அதேநேரம் இதற்கு நேர்மாறாக, ஏஐ மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு டிரம்ப் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்கா தனது முன்னிலையை தக்கவைக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

    சீனா அமெரிக்கா போட்டி ஏஐ, செமிகண்டக்டர் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தாண்டி பாதுகாப்பு விவகாரங்களிலும் தொடர்கிறது. குறிப்பாக தைவான் விவகாரத்தில் தைவான் சுதந்திரத்தை அமெரிக்கா ஆதரிக்கக் கூடாது என டிரம்ப்பிடம் ஜி வலியுறுத்தியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சொல்லும் சீனா, அதை அமெரிக்கா தனி நாடாக கருதக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்துகிறது.

    Advertisement

    அமைதி ஒப்பந்தம்

    அதேபோல் அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி, போர் நிறுத்தத்தை தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை நோக்கி நகர வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். அதேநேரம் ஈரான் விவகாரத்தில் சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு உதவ வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது.

    இரு நாடுகளுக்கும் மாறி மாறி வரிகளை விதித்து கொண்டு இருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஜனவரி 10 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தையை தொடர கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால் வரிகள், அமெரிக்க விவசாய பொருட்களை சீனா வாங்குவது, அரிய கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் போன்ற முக்கிய பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

    Advertisement

    ராணுவ தொடர்புகள்

    சீனா மற்றும் அமெரிக்காவின் நலன்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளதாக கூறிய ஜி ஜின்பிங், இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்றார். மேலும், இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே தொடர்ந்து தகவல் தொடர்பு இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எதிர்பாராத மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

    English Summary

    China President Xi Jinping has stressed that AI development should remain under human control(ஏஐ தொடர்பாக ஜி ஜின்பிங்): Human Control Over AI urged by China President Xi Jinping.