அதிகாரிகளை மிரட்டிய மருத்துவர்... அமெரிக்க பிணவறையில் 5 மணி நேரத்திற்குப் பிறகு தெரிந்த அந்த அசைவு

  • வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஒரு அதிசயம் நடந்துள்ளது.. இதை பற்றிதான் சோஷியல் மீடியாவில் ஒரே பேச்சாக உள்ளது.. மருத்துவ துறையில் கவனக்குறைவு என்பது பொதுவான விஷயம்தான்.. ஆனால், இந்த அளவுக்கு கவனக்குறைவாக டாக்டர்கள் இருப்பார்களா? என்பது ஆச்சரியமாக உள்ளது.. அப்படி என்ன நடந்தது அமெரிக்காவில்?

    Advertisement

    கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் ஒரு வீட்டில் திடீரென விபத்து நடந்தது. அங்கு வின்சென்ட் என்ற 18 மாத பச்சிளம் குழந்தை, வீட்டின் பின்பக்கம் இருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்துவிட்டது.

    Advertisement

    பிணவறையில் அசைந்த உடல்

    இதனால் பதறிப்போன பெற்றோர், 911 எமர்ஜென்சி நம்பருக்கு போன் செய்து வரவழைத்தனர்.. மருத்துவக்குழுவினரும் உடனடியாக குழந்தையை மீட்டு, மெர்சி கில்பர்ட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.. இதனால் குழந்தை உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.. இதுவே போலீஸ் அறிக்கையிலும் பதிவு செய்யப்படட்து..

    குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதுமே அங்கிருந்த பெற்றோர் கதறி அழுதனர்.. ஆனால் அடுத்த சில நொடிகளில் குழந்தையின் உடலில் ஏதோ அசைவு இருப்பதை கவனித்துள்ளனர்.. பாதுகாப்புக்கு வந்திருந்த 2 போலீஸ் அதிகாரிகளும்கூட, குழந்தை மூச்சு வாங்குவதை கவனித்துள்ளனர்.

    Advertisement

    உங்க வேலையை பாருங்க

    எனவே உடனடியாக பெற்றோரும், 2 போலீஸ் அதிகாரிகளும் உடனே டாக்டரிடம் சொல்லி உள்ளார்கள்.. ஆனால், அந்த டாக்டரோ, "உங்க வேலையை பாருங்க, என் வேலையை நீங்க செய்யாதீங்க.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. நான் சும்மா மெடிக்கல் காலேஜுக்குப் போகல, என்னை வேலை செய்ய விடுங்க" என்று அதிகாரிகளையே அடக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சட்ட விதிமுறைப்படி குழந்தை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    குழந்தை பிணவறையின் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டு சுமார் 5 மணி நேரம் கடந்திருந்தது. அப்போது மாகாண மருத்துவப் பரிசோதகர் குழுவினர், குழந்தையின் உடலை ஆய்வு செய்ய பிணவறைக்கு வந்திருந்தனர்.. அப்போது இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட வின்சென்ட், மூச்சு விட்டு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    Advertisement

    பெற்றோர்களுக்கு வந்த பிரச்சனை

    உடனடியாக அந்த குழந்தை மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் இன்னொரு பெரிய மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையால் குழந்தை உயிர் பிழைத்தது, இப்போது அவரது உடல்நிலை சீரடைந்துள்ளது.

    இதையடுத்து, மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். குழந்தை எப்படி இறந்தது என்று ஆய்வு செய்தபோது, அதிர்ச்சி அடைந்தனர்.. காரணம், குழந்தையின் வீட்டில் கஞ்சா வாசனை அடித்துள்ளது.. நீச்சல் குளக் கதவுகள் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் திறந்து கிடந்துள்ளது.. அதனால்தான் குழந்தை விபத்தில் சிக்கி இறந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.

    வின்சென்ட்டுக்கு தொடர் சிகிச்சை

    இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் மீது கடுமையான அலட்சியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கு கோர்ட் வரை இப்போது சென்றுள்ளது.. மேரிகோபா கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் இந்த வழக்கை ஆய்வு செய்து வருகிறது. அதேபோல மருத்துவமனை நிர்வாகமும் தங்களின் தவறை மறுஆய்வு செய்வதாக கூறியுள்ளது.

    Advertisement

    வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்து வந்தாலும், வின்சென்ட்டுக்கு தொடர் சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.. பிணவறைக்கு சென்ற குழந்தை உயிருடன் மீண்ட இந்த சம்பவம், இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    English Summary

    Doctor Ignored Warnings, Then Came a Shocking Discovery in a US Morgue After 5 Hours