$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?

  • வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தாக உள்ள நிலையில், டிரம்பின் கருத்து புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு 300 பில்லியன் டாலர் (சுமார் 28 லட்சம் கோடி ரூபாய்) வழங்குவதாக நான் கூறவில்லை எனவும் அது போலியான செய்தி என்றும் டிரம்ப் கூறியுள்ளார். டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் தரப்பில் இருந்து என்ன மாதிரியான ரியாக்‌ஷன் வரும்.. அமைதி ஒப்பந்தம் திட்டமிட்டபடி முன்னெடுத்து செல்லப்படுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Advertisement

    ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால், கடும் கோபம் அடைந்த ஈரான், அமெரிக்காவுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளை தாக்கியது. உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது.

    Advertisement

    முற்றிலும் பொய்யானது - டிரம்ப்

    இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. 100 நாட்களுக்கும் மேலாக ஈரான் - அமெரிக்கா போர் நீடித்து வரும் நிலையில், தற்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் அமெரிக்கா - ஈரான் இடையே எலக்ட்ரானிக் முறையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக ஈரானுக்கு 300 மில்லியன் டாலர் வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டது. இது டிரம்ப்புக்கு ஒருபக்கம் உள்நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்த நிலையில், டிரம்ப் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்று உறுதியளித்த டிரம்ப், அதேவேளை, அமெரிக்கா ஈரானுக்கு நிதி வழங்கும் செய்திகளை அவர் மறுத்துள்ளார். இறுதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்து ஆகாத நிலையில், டிரம்பின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- "அணு ஆயுதத்தை ஒருபோதும் வைத்திருக்க மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது! மேலும், ஈரானுக்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்குவதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் பொய்யானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ஈரான் சொல்வது என்ன?

    100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அமைதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் இரு நாடுகளும் பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாளே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே 300 பில்லியன் டாலர் பணம் பற்றிய சர்ச்சை பெரிதாக எழுந்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குறைந்தது 300 பில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு உதவிகளை வழங்க வேண்டும் என ஈரான் கோரியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    இதில், முடக்கப்பட்ட 24 பில்லியன் டாலர் ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது, எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளும் அடங்கும் என ஈரானிய தரப்பு கூறுகிறது. ஆனால் அமெரிக்க தரப்போ, இது அரசு நேரடியாக கொடுக்கும் பணம் அல்ல, தனியார் முதலீடுகளுடன் கூடிய சர்வதேச மறுசீரமைப்புத் திட்டம் மட்டுமே என விளக்குகிறது. வேறுபாடு இரு தரப்பிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

    Advertisement

    முக்கியமான படி

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், "தற்போதைய ஒப்பந்தம் வெறும் ஒன்றரை பக்கங்கள் கொண்ட பொதுவான ஆவணம். முழு விவரங்களும் அடுத்த சில நாட்களில் வெளியாகும்" என்றார். இந்த வரைவு ஒப்பந்தப்படி, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் பெருமளவு தளர்த்தப்படும். சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்கள் ஈரானுக்குள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிப்பதற்கு ஈரான் ஒத்துழைக்க வேண்டும். மேலும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.

    Advertisement

    முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டு வரும் பூர்வாங்க ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். ஜி7 உச்சிமாநாட்டுக்குச் சென்ற அவர், ஜெனிவாவில் நடக்கும் அதிகாரப்பூர்வ கையெழுத்து விழாவில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார். ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் இந்த ஒப்பந்தத்தை "முக்கியமான படி" என்று கூறினார். அதே நேரத்தில், அமைதிக்கான இறுதி ஒப்பந்தம் இன்னும் தொலைவில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

    English Summary

    Donald Trump denied reports that America would provide $300 billion to Iran under a proposed peace deal, calling them fake news. His remarks have sparked fresh uncertainty, raising questions about Iran’s response and whether the planned agreement will proceed.