வாஷிங்டன்: ஜெலன்ஸ்கி சரிபட்டு வரமாட்டார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் அதிபரை மாற்ற வேண்டியம் நேரம் இது எனவும், உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியிருக்கவே கூடாது. இந்த போர் தொடங்க எந்த காரணமும் இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் அதனை சமாளிக்க டிரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க எதிர்ப்பு தெரிவித்து, கடுமையான வரி விதிப்பை அமல்படுத்டிய டிரம்ப், தற்போது தனது சொந்த தேவைக்காக அதே ரஷ்யாவிடம் இருந்து எண்னெய் வாங்க முடிவு செய்து இருப்பது கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இந்தியாவும் சீனாவும் எண்ணெய் கொள்முதல் செய்வதால், ரஷ்யா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொண்டு, உக்ரைன் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் விமர்சித்து இருந்தார். ரஷ்யாவிடம் வர்த்த உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது வரி விதிப்பு அமல்படுத்தப்படும் என்று கூறி வரி விதித்த டிரம்ப் தற்பொது தனது சொந்த நாட்டு நலனுக்காக அதே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் கோபம் அடைந்துள்ள டிரம்ப், ஜெலன்ஸ்கி இருக்கும் வரை ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வராது என்று காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது:- ரஷ்யாவை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், அந்த நாட்டின் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கூறியிருந்தோம். ஏனெனில் அது சர்வேதச பிரச்சினையாகும். ஆனால் ஜெலன்ஸ்கி என்ன செய்தார்? ரஷ்யாவின் டீசல் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தினார். உக்ரைனுக்கு புதிய அதிபர் வர வேண்டிய நேரம் இது என நான் நினைக்கிறேன். உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியிருக்கவே கூடாது. இந்த போர் தொடங்க எந்த காரணமும் இல்லை. 30 சதவீத நிலப்பரப்பை ஜெலன்ஸ்கி இழந்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.. என்று கூறினார்.டொனால்டு டிரம்ப் பேச்சு
இது இனி 'டிரம்ப்’ கடல்.. அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல் பெயரை மாற்றும் அமெரிக்க அதிபர்! யோவ் யாருயா நீ?
உக்ரைனுக்கு புதிய அதிபர் வரவேண்டும்
எல்லாம் சவுதி அரேபியாவிற்காக.. ஹவுதிகளுக்கு எதிராக களமிறங்கும் அமெரிக்க படைகள்? டிரம்ப் அதிரடி