வாஷிங்டன்: ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள், சவுதி அரேபியா மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் ஹவுதிகளுக்கு கடும் வார்னிங் கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவை காப்பாற்ற தேவையான உதவிகளை செய்யும்படி துருக்கி அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுவான ஹவுதிகளுக்கும் இடையேயான மோதல் தீவிரமாக உள்ளது. சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளதோடு, 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி நள்ளிரவில் சவுதி அரேபியாவின் 'அராம்கோ' எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகம் மீது ஏவுகணை தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை எடுத்து கொண்டால் அமெரிக்காவிற்கு நல்ல நட்பு நாடாக உள்ளது. ஆனால் ஹவுதிகள், அமெரிக்காவிற்கு எதிராக உள்ளது. ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் அமெரிக்காவும், ஹவுதிகளும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இந்நிலையில் தான் ஹவுதிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வார்னிங் கொடுத்துள்ளார். நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் காரணமாக டொனால்ட் டிரம்ப் தற்போது இந்த மோதலில் தலையிட தயக்கம் காட்டி வரும் நிலையில் ஹவுதிகளுக்கு புதிய வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், ''ஹவுதிகள் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினோம். அதன்பிறகு அவர்களின் வேண்டுகோளை ஏற்று தாக்குதலை நிறுத்தினோம். அந்த தாக்குதலில் அவர்கள் பாடம் கற்று இருப்பார்கள் என்று நினைத்தேன். ஏனென்றால்அவர்கள் அதன்பிறகு அமைதியாக இருந்தனர். ஆனால் இப்போது மீண்டும் சவுதி அரேபியாவை மோசமாக தாக்குகிறார்கள். அநேகமாக ஈரானின் தூண்டுதலில் தான் அவர்கள் இதை செய்கிறார்கள். ஈரான் என்பது கடற்படை அல்லது விமானப்படை இல்லாத உலகின் மிக மோசமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கிறது. அங்கு 301 சதவீத பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்னர். அந்த நாடு ஒரு வீழ்ச்சியடைந்த நாடக உள்ளது. அநேகமாக அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக வேண்டுமென்றே கச்சா எண்ணெய் விலையை உயர்த்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது நல்லதல்ல. நான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டேன் என்பதை யாராவது அவர்களுக்கு விளக்க வேண்டும். அதேபோல் தேர்தலுக்குப் பிறகும் நான் அதிபராகவே இருப்பேன். இதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்'' என்று வார்னிங் செய்துள்ளார். அதுமட்டுமின்றி நேற்று டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ''ஹவுதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள சவுதி அரேபியாவிற்கு உதவி செய்யும்படி துருக்கி அதிபர் தையிப் எர்டோகனிடம் நான் கேட்க வாய்ப்புள்ளது. நான் சொன்னால் எர்டோகன் சவுதி அரேபியாவிற்கு உதவி செய்வார்'' என்று கூறியுள்ளார். சவுதி அரேபியா - பாகிஸ்தான் - துருக்கி இடையே 'மெக்கா ஒப்பந்தம்' உ்ள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது 3 நாடுகளில் எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அது மற்ற 2 நாடுகளின் மீதான தாக்குதலாக கருதி 3 நாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுக்கும் என்பதாகும். ஆனால் தற்போது வரை சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினாலும் துருக்கி, சவுதி அரேபியாவிற்கு உதவவில்லை. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவிற்கு உதவி செய்யும்படி துருக்கி அதிபரிடம், டொனால்ட் டிரம்ப் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனென்றால், துருக்கி - அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. இருநாடுகளும் 'நேட்டோ' படையில் அங்கம் வகிக்கின்றன. அதுமட்டுமின்றி துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே தனிப்பட்ட நட்பு உள்ளது. இதனால் ஹவுதிகளுக்கு எதிராகவும், சவுதி அரேபியாவிற்கு ஆதரவாகவும் துருக்கி முழுவீச்சில் களமிறங்குகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.சவுதியின் இதயத்தில் அடித்த ஹவுதிகள்.. 'அராம்கோ’ தலைமையகத்தில் ஏவுகணை 'அட்டாக்’.. ஏன் முக்கியம்?
சவுதி அரேபியாவை காப்பாற்ற ரெடியான இஸ்ரேல்! நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு குட்நியூஸ்