ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்.. சுவிஸ் பேச்சுக்கு நடுவே டிரம்ப் மிரட்டல்! போச்சு


  • தெஹ்ரான்: "ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை மீண்டும் நடத்துவோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார். ஈரான் - அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள சூழலில் டிரம்பின் இந்த பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

    Advertisement

    அமெரிக்கா - ஈரான் போரை நிறுத்தும் ஆரம்ப கட்ட முயற்சியாக இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 14 அம்ச திட்டங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்குவதற்காக சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் பிரதிதிகள், பாகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

    Advertisement

    பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. லெபானில் உள்ள தங்கள் பிராக்சி அமைப்பை பயன்படுத்தி பிரச்சினையை கிளப்புவதை ஈரான் நிறுத்தாவிட்டால் அந்த நாட்டின் மீது பயங்கரமான தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

    சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை

    அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை கடுமையான உச்சத்தை எட்டியது.

    Advertisement

    அமெரிக்கா - ஈரான் போரால் சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. 100 நாட்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், இருநாடுகளுக்கும் இடையே போரை நிறுத்துவதற்கான தொடக்க நிலை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்குவதற்காக சுவிட்சர்லாந்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில், ஈரான் சார்பாக அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.

    இயல்பு நிலை திரும்புமா?

    அமெரிக்கா சார்பாக துனை அதிபர் ஜேடி வான்ஸ் பங்கேற்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ராணுவ தளபதி ஆசிமின் முனிர் ஆகியோரும் கத்தார் பிரதிநிதிகளும் மத்தியஸ்தர்களாக பங்கேற்றுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதி இடமான பர்கென்ஸ்டாக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றால் ஈரான் - அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டு மத்திய கிழக்கில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இதனால், சந்தையில் நிலவும் கொந்தளிப்பான சூழலும் மாறும் என்பதால் ஒட்டு மொத்த உலகும் பேச்சுவார்த்தையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. பேச்சு வார்த்தை தொடங்கியுள்ள சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தி பரபரப்பு பதிவு ஒன்றை பொட்டுள்ளார். டிரம்ப் தனது பதிவில், கூறியிருப்பதாவது: "லெபனானில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும், அதிக நிதியுதவி பெறும் ஈரானின் பிரதிநிதி (Proxy) அமைப்புகள் உடனடியாக தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

    கடுமையாக ஈரானை தாக்குவோம்!

    அவர்கள் அதைச் செய்யாவிட்டால், கடந்த வாரம் செய்ததைப் போலவே, ஆனால் அதைவிட கடுமையாக, ஈரானை மீண்டும் தாக்குவோம்!" என்று எச்சரித்துள்ளார். ஈரான் பெருமளவு நிதி உதவி அளித்து வரும் லெபானானில் உள்ள அவர்களது பிராக்சி அமைப்புகள் பிரச்சினையை உருவக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதை செய்ய தவறினால், ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை மீண்டும் நடத்துவோம்." என்று பதிவிட்டுள்ளார். ஈரான் - அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள சூழலில் டிரம்பின் இந்த பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

    English Summary

    Donald Trump warned that Iran could face another massive military strike if it continues using proxy groups in Lebanon to fuel tensions. His statement came even as peace negotiations between the United States and Iran continue in Switzerland.