வாஷிங்டன்: எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்காவில் உள்ள 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் 7.8 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களுக்கு தலா ஒரு பங்கு வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகள், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் தற்போது, எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கை ஒன்று ஒட்டு மொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அடுத்த ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகுகளை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- "அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ்க் எக்ஸ் பங்குகளில் ஒன்றை வழங்க உள்ளேன். இதுபோன்ற பல நடவடிக்கைகள் இருக்கும். அதில் முதல் அறிவிப்பு இது" என்று கூறியுள்ளார். செல்வ வளம் பொருந்திய நாடான அமெரிக்காவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 7.2 கோடி பேர் உள்ளனர். இவர்களில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு பங்கு வழங்கப்பட்டால், மொத்தம் 7.2 கோடி பங்குகள் மொத்தமாக தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 16 ஆம் தேதிப்படி வர்த்தக முடிவில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 146.03 டாலராக உள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிட்டால், அனைத்து குழந்தைகளுக்கும் பங்குகளை வழங்குவதன் பங்குகளின் மொத்த மதிப்பு சுமார் 10.5 பில்லியன் டாலராக இருக்கும். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் இது சுமார் ரூ.88,000 கோடிக்கு மேலான தொகையாகும். எலான் மஸ்க்கின் இந்த திடீர் அறிவிப்பு அமெரிக்கர்களையே வியக்க வைப்பதாக அமைந்துள்ளது. பங்குகள் எவ்வாறு விநியோகிக்கப்படும், யாரெல்லாம் தகுதி பெறுவார்கள், குழந்தைகளின் பெயரில் நேரடியாகப் பங்குகள் வழங்கப்பட இருக்கிறதா? அல்லது பெற்றோர்களின் பெயரில் வழங்கப்படுமா என்பது குறித்து விரிவான தகவல்கள் எதையும் எலான் மஸ்க் வெளியிடவில்லை. இதனால், எலான் மஸ்க் அறிவித்துள்ள இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பங்குகளின் தொகையை பொறுத்தவரை வழங்கப்படும் நாளில் அதன் தொகை மாறுபடும். இதனால், வழங்கப்படும் பங்குகளின் மதிப்பு அன்றைய தினம்தான் உறுதியாக தெரியவரும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை 147.43 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த மதிப்பு அதன் வெளியீட்டு விலையைவிட கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைவாகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்த நிறுவனத்தின் மதிப்பு எதிர்காலத்தில் பலமடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலகின் நம்பர் பணக்காரர் ஆக உள்ளார். இவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 88 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க், உயர்கல்வியை கனடா மற்றும் அமெரிக்காவில் பயின்றார். கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், அமெரிக்காவில் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.7.2 கோடி குழந்தைகளுக்கு
எப்படி இதனை வழங்குவார்?
இஸ்ரோவுக்கு உதவும் எலான் மஸ்க்! ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஏவப்படும் இந்திய செயற்கைக்கோள்!என்ன காரணம்
எலான் மஸ்க் சொத்து மதிப்பு
விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. களமிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ்! காப்பாற்றுவாரா எலான் மஸ்க்?