டிரம்ப் ஜெயிச்சே ஆகணும்.. ரூ.26,343 கோடியை அள்ளி கொடுத்த எலான் மஸ்க்! அடேங்கப்பா

  • வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் பணத்தை வாரி இறைத்து வருகிறார். தற்போது வரை டொனால்ட் டிரம்ப் கட்சிக்கு ரூ.26,343 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

    Advertisement

    அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட பிறகு 2 ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையில் இடைக்கால தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல் என்பது அமெரிக்க அதிபரின் 2 ஆண்டு செயல்பாட்டுக்கு கிடைக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படும்.

    Advertisement

    அதுமட்டுமின்றி அடுத்த 2 ஆண்டில் அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இடைக்கால தேர்தல் என்பது அமெரிக்காவில் கீழ்சபையாக இருக்கும் காங்கிரஸ் சபையில் 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட்டில் உள்ள 100ல் 35 இடங்களுக்கும் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். மாறாக பைடன், கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அது டொனால்ட் டிரம்புக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். பொதுவாக இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கட்சி தோற்றாலும் கூட அவரது அதிபர் பதவிக்கு பிரச்சனை வராது.

    Advertisement

    ஆனால் புதிதாக ஏதாவது சட்ட திருத்தம், விதிகளை கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ், செனட் சபைகளின் ஆதரவு வேண்டும். தோற்றால் அது கிடைக்காது. டிரம்பால் முழு சுதந்திரத்துடன் அதிபராக செயல்பட முடியாது. காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி டிரம்புக்கு எதிராக குற்றவியல் நடைமுறையை கொண்டு வரலாம்.

    இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதேபோல் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சி வெற்றி பெற வேண்டும் என எலான் மஸ்க் நினைக்கிறார். இதற்காக டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிகளவில் நிதியை நன்கொடையாக வாரி இறைத்து வருகிறார் எலான் மஸ்க்.

    Advertisement

    அதன்படி இடைக்கால தேர்தலுக்காக எலான் மஸ்க் மொத்தம ரூ26,343 கோடி டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சிக்கு வழங்கி உள்ளார். இந்த நன்கொடைகள் 'அமெரிக்கா பிஏசி' என்ற அமைப்பின் வழியாக வழங்கப்பட்டுள்ளது. 'அமெரிக்கா பிஏசி' எலான் மஸ்க்கால் உருவாக்கப்பட்ட அரசியல் நன்கொடை வழங்கும் அமைப்பாகும்.

    இந்த அமைப்பு தற்போது டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்புக்கு புதிதாக ரூ.7,265 கோடி அனுப்பி வைத்துள்ளார் எலான் மஸ்க். அதற்கு முன்பாக அந்த அமைப்பில் இருந்து ரூ.15,103 கோடி செனட் லீடர்ஷிப் ஃபண்ட்டிற்கு (டிரம்பின் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான அரசியல் ஆதரவு கமிட்டி) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரூ.1,912 கோடி 'காங்கிரஸ்னல் லீடர்ஷிப் ஃபண்ட்' (பிரதிதிநிகள் சபை தேர்தல்களில் குடியரசு கட்சியினரை ஆதரிக்கும் நிதி)என்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதுமட்டுமின்றி டெக்சாஸ் தலைமை வழக்கறிஞர் கென் பாக்ஸ்டனின் செனட் தேர்தல் பிரசாரத்தை ஆரிக்க லோன் ஸ்டார் லிபர்ட்டி பிசேிக்கு ரூ.956 கோடி, குடியரசு கட்சி ஆளுநர்கள் சங்கத்திற்கு ரூ. 956 கோடி, குடியரசு கட்சி தலைமை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ரூ.191 கோடி வழங்கி உள்ளார்.

    எலான் மஸ்க் கடந்த 2024ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மொத்தம் ரூ.27,721 கோடியை நன்கொடையாக செலவிட்டார். இதற்கு பலனாக டொனால்ட் டிரம்ப் அவருக்கு DOGE பிரிவின் தலைவர் பதவியை வழங்கினார். அமெரிக்காவின் செலவை குறைக்கும் பணியில் இந்த DOGE ஈடுபட்டு வந்தது. அதன்பிறகு டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகினார்.

    Advertisement

    டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி கூறி அவருக்கு நெருக்கடியை கொடுத்து பதவி நீக்கம் வரை கொண்டு செல்லலாம் என்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதனால் தான் நம் நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளின் போது வெளியிடப்படும் பணம் சார்ந்த அறிவிப்புகளை டொனால்ட் டிரம்பும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Elon Musk Donations: Midterm elections are scheduled to take place in the United States on November 3rd. Elon Musk, one of the world's wealthiest individuals, is spending lavishly to ensure a victory for President Donald Trump's Republican Party in this election. It has been revealed that he has donated Rs.26,343 crore to Donald Trump's party so far.