விண்வெளி போக 10 நிமிடம்தான்.. ஆனா விண்வெளி நிலையம் செல்ல 8 மணி நேரம்.. ஏன் இந்த வித்தியாசம்?

  • வாஷிங்டன்: எலான் மஸ்க்கின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இப்போது ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர். வெறும் சில நிமிடங்களில் அந்த ராக்கெட் விண்வெளியை அடைந்தாலும் அது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல பல மணி நேரம் ஆகுமாம். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    ஃபால்கன் 9 ராக்கெட் புறப்பட்ட சுமார் 8.5 முதல் 10 நிமிடங்களிலேயே விண்வெளியை அடைந்துவிடும். அதாவது இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் பூமியில் இருந்து புறப்படும் ராக்கெட் மணிக்கு 28,000 கிமீக்கும் அதிகமான வேகத்தை எட்டுகிறது. ஆனால், அதே ராக்கெட்டில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைய பல மணி நேரம் ஆகிறது.

    Advertisement

    7 மணி நேரம்

    அதாவது விண்வெளியை சில நிமிடங்களில் சென்றடைந்தாலும் கூட விண்வெளி நிலையத்தை அடைவதற்கு பல மணி நேரம் ஆகிறது. அந்த கூடுதல் 7+ மணி நேர பயணத்தில் விண்கலம் என்ன செய்கிறது என்ற கேள்விக்கான பதிலை நாம் பார்க்கலாம்!

    இதற்கான முக்கிய காரணம் விண்வெளியில் உள்ள தூரத்தைவிட சுற்றுப்பாதை இயக்கவியல் ஆகும். ராக்கெட் விண்வெளிக்கு சென்றவுடன் நேரடியாக விண்வெளி நிலையத்தை நோக்கி சென்று விட முடியாது. முதலில் சரியான சுற்றுப்பாதையில் அது நிலைநிறுத்தப்பட வேண்டும். பின்னர் விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையுடன் தனது பாதையை படிப்படியாக ஒத்திசைக்க வேண்டும்.

    Advertisement

    ஃபால்கன் 9 ராக்கெட்

    இன்று அக்டோபர் 1ஆம் தேதி ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டது. அதில் கனடாவின் விண்வெளி வீரர் ஜோஷுவா குட்ரிக், நாசா வீரர்கள் ஜெசிகா வாட்கின்ஸ், லூக் டெலானி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் செர்கெய் டெட்டர்னிகோவ் ஆகிய 4 பேர் பயணித்தனர்.

    ஏன் 7 மணி 50 நிமிடம்?

    க்ரூ-13 விண்கலம் ஐஎஸ்எஸ் சென்றடைய திட்டமிடப்பட்ட நேரம் 7 மணி 50 நிமிடங்கள். ராக்கெட் ஏற்கனவே விண்வெளியை அடைந்துவிட்டாலும், விண்கலமும் விண்வெளி நிலையமும் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதில்லை. இரண்டும் பூமியை சுற்றி அதீத வேகத்தில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் பயணித்து கொண்டிருக்கின்றன. அதை ஒரேயடியாக இணைத்தால் விபத்து ஏற்படும்.

    Advertisement

    இதன் காரணமாகவே விண்கலம் தனது வேகத்தையும் சுற்றுப்பாதையையும் தேவைக்கேற்ப மாற்றி கொண்டு, விண்வெளி நிலையத்துடன் சந்திக்கும் சரியான நிலையை அடைய வேண்டும். இதற்கு பிறகே ஐஎஸ்எஸ் உடன் இணையும் செயல்முறை தொடங்கும். இது தொடர்பாக ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரி பில் கெர்ஸ்டன்மையர் கூறுகையில், "விண்வெளி நிலையமும் டிராகன் விண்கலமும் சந்திக்கும் கோண தூரம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் சந்திப்பு எளிதாகவே நடக்கும்" என்றார்.

    6 மாதங்கள் ஆய்வு

    அதாவது இரண்டும் ஒரே கோணத்தில் இருப்பதால் தான் வெறும் 7.50 மணி நேரத்தில் இணைப்பு சாத்தியமாகிறது. இல்லையென்றால் மேலும் கூட நாட்கள் எடுக்கும். டிராகன் விண்கலம் ஐஎஸ்எஸ் உடன் இணைந்த பிறகு, கதவு திறக்கப்பட்டு விண்வெளி வீரர்கள் நிலையத்துக்குள் செல்வார்கள். க்ரூ-13 அங்கு சுமார் 6 மாதங்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்.

    Advertisement

    இதில் இதய நோய், பார்கின்சன் நோய் உள்ளிட்டவற்றுக்கான மருத்துவ ஆராய்ச்சிகள், மனித திசுக்கள் தொடர்பான ஆய்வுகள், விண்வெளியில் பயிர் உற்பத்தி, ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளன. அதனால், ராக்கெட்டுக்கு விண்வெளியை அடைய சில நிமிடங்களே போதுமானதாக இருந்தாலும், விண்வெளியில் சரியான இடத்தை அடைவதுதான் பல மணி நேரம் எடுத்துக்கொள்ளும் சவால்!

    English Summary

    SpaceX’s Falcon 9 rocket can reach space within around 8.5 to 10 minutes(எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்): Crew-13 is scheduled to take about 7 hours 50 minutes to reach the International Space Station.