டிரம்ப் தோற்றாலும்.. பெட்ரோல், டீசல் விலை குறையாது! இந்தியாவுக்கு வந்த முக்கிய எச்சரிக்கை!

  • வாஷிங்டன்: அமெரிக்காவில் நவ.3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தாலும்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    எம்கே குளோபல் ஃபைான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையை டெக்கான் கிரோனிக்கிள் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

    Advertisement

    ஆய்வறிக்கையில், அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றாலும்.. அதிபர் டொனால்ட் டிரம்பின் வெளியுறவுத்துறை கொள்கை முடிவுகளை அது கட்டுப்படுத்தாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நவ.3ம் தேதி தேர்தலுக்கு பிறகு.. ஈரான் உடனான மோதல் மீண்டும் தீவிரமடைந்தால்.. கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும். அமெரிக்கா, ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்தினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது என ஆய்வில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

    கச்சா எண்ணெய் விலை உயர்வால்.. இந்தியாவின் பேலன்ஸ் ஆப் பேமென்ட்ஸ் (BoP), அந்நிய செலாவணி சந்தை மற்றும் பங்கு சந்தைகள் தொடர்ந்து அழுத்தத்தை சந்திக்கும். அமெரிக்க டாலரின் மதிப்பு, பாண்ட் பத்திரங்களின் வட்டி விகிதம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவையே இந்திய சந்தையின் முக்கிய காரணகளாக இருக்கும்.

    Advertisement

    அமெரிக்க தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, பிரதிநிதிகள் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றும் என்றும், சென்ட் சபையிலும் அவர்களின் பெரும்பான்மை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் எம்கே நிறுவனம் கணித்துள்ளது.

    இந்தியாவை கண்டுக்காத டிரம்ப்.. இப்போது பாருங்க எவ்வளவு கஷ்டப்படுறாருனு! நமக்குதான் சாதகம்!

    ஜனநாயக கட்சி இரு அவைகளையும் கைப்பற்ற 60% வாய்ப்பும், பிரதிநிதிகள் சபையை மட்டும் கைப்பற்ற 30% வாய்ப்பும், குடியரசு கட்சி இரு அவைகளையும் தக்கவைக்க 10% வாய்ப்பும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் அவையை ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும்.. டிரம்பின் வர்த்தக வரிகள் மற்றும் குடியேற்ற கொள்கைகள் பெரிய அளவில் மாறாது. ஏனெனில் அதிபருக்கு இதில் கூடுதல் அதிகாரம் இருக்கிறது.

    Advertisement

    எனவேதான் இந்த தேர்தலில் டிரம்ப் தோற்றாலும் கூட.. இந்தியாவுக்கு பெரிய நன்மை கிடைக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவுக்கு நன்மை நடக்க வேண்டும் எனில்.. அதிபர் பதவியிலிருந்து குடியரசுக் கட்சி விலக வேண்டும். அது நடந்தால்தான் ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வரும். இது முடிந்தாலே.. கச்சா எண்ணெய் சப்ளை நார்மலாக தொடங்கி.. இந்தியாவுக்கு எண்ணெய் சீராக கிடைக்கும். இப்படித்தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்.

    English Summary

    Experts Warn India: Midterm elections are taking place in the United States on November 3rd. Experts have warned that even if President Donald Trump’s Republican Party faces defeat, the prices of petrol and diesel in India will not decrease.