பாகிஸ்தானுக்கு ஏன் நிதியுதவி செய்யணும்? அமெரிக்காவின் முதல் முஸ்லீம் எம்பி சரமாரி கேள்வி

  • வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதல் முஸ்லீம் எம்பியான அப்துல் எல்-சயீத், பாகிஸ்தானுக்கு செய்யப்படும் நிதியுதவி தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க நிதியை வாங்கிவிட்டு சர்வதேச சட்டங்களை மீறுவோருக்கு ஏன் தொடர்ந்து நிதியளிக்க வேண்டும் என்றும் அதை அமெரிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த முடிந்த மிட் டேர்ம் தேர்தலில் வென்றவர் அப்துல் எல்-சயீத். மிச்சிகன் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸை தோற்கடித்து வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியை சேர்ந்த அப்துல் எல்-சயீத், அமெரிக்க செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.

    Advertisement

    முஸ்லீம் எம்பி

    பாகிஸ்தான், எகிப்து, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க வரிப்பணத்தை பயன்படுத்தி சர்வதேச சட்ட மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கக் கூடாது என்பதே அவரது வாதம். அமெரிக்காவின் நிதியுதவி மற்றும் ராணுவ உதவியை பெறும் நாடுகள், அந்த பணத்தை பயன்படுத்தி சர்வதேசச் சட்டங்களை மீறினால், நிதியுதவி தொடர்பாக அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தான்

    அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டி அளித்த அப்துல் எல்-சயீத், "சர்வதேச சட்டங்களை அமெரிக்காவே முதலில் மதித்து நடக்க வேண்டும். இந்த விவகாரத்தை இஸ்ரேலுடன் மட்டும் சுருக்கிவிடக் கூடாது. எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கும் இதே அணுகுமுறை பொருந்தும். ஒரு நாட்டுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிக்கிறது; அந்த நிதியைப் பயன்படுத்தி அந்த நாடு சர்வதேச சட்டங்களை மீறுகிறது என்றால், அங்கிருந்துதான் நடவடிக்கையை தொடங்க வேண்டும். பாகிஸ்தான், ஜோர்டான் ஆகிய நாடுகளிடமும் அமெரிக்கா இதே அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்" என்றார்.

    Advertisement

    இஸ்ரேல்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சுமார் 4 பில்லியன் டாலர் ராணுவ உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதை வரவேற்றுள்ள அப்துல் எல்-சயீத், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் இனப்படுகொலை, நிறவெறி நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    தற்போது அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 2028ஆம் ஆண்டு வரை நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் வழங்கப்படும் ராணுவ உதவிகளையும் அப்துல் எல்-சயீத் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அமெரிக்க மக்களின் வரிப்பணம் உள்நாட்டு தேவைகளுக்கு முதலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரது வாதமாகும்.

    Advertisement

    நிதியுதவி

    பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியுதவி வழங்கப்படுவது தொடர்பாக இந்தியா ஏற்கெனவே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அமைப்புகள் வழங்கும் கடன்களை பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துகிறது என்பதே இந்தியாவின் பிரதான குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தை சர்வதேச அரங்கில் இந்தியா தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. உலக வங்கியிடமிருந்து பாகிஸ்தான் கூடுதல் நிதி பெறுவதற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி செல்கிறது. இந்த சூழலில் தான் அமெரிக்காவின் முதல் முஸ்லீம் எம்பி ஒருவரே இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். வரும் காலங்களில் இந்த விவகாரம் மேலும் பெரிதாக வெடிக்கும் என தெரிகிறது.

    English Summary

    Newly elected US Senator Abdul El-Sayed has urged Washington to reconsider financial and military assistance(அமெரிக்காவின் முதல் முஸ்லீம் எம்பி அப்துல் எல்-சயீத்): All things to know about First Muslim US Senator.