வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில், முதன் முறையாக ஆண் தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் செனட்டர் அவைக்கு உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் மாற்று பாலினத்தவர்கள் மீது அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசு போட்ட பல்வேறு தடைகளுக்கு, இந்த வெற்றி பதிலளித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு 2 சபைகள் இருக்கின்றன. ஒன்று மேல்சபை, இரண்டாவது சென்ட் சபை. இந்த செனட் சபைக்கான தேர்தலில்தான் தற்போது தன்பாலின ஈர்ப்பாளர் கிரிஸ் பாப்பஸ் ஜெயித்திருக்கிறார்.
நியூ ஹாம்ப்ஷயர் தொகுதியில் போட்டியிட்ருந்த இவர், டிரம்பின் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றி சர்வதேச அளவில் பெரிய கவனம் பெற்றிருக்கிறது. காரணம், கடந்த காலங்களில் அமெரிக்காவில் மாற்று பாலினத்தவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள்தான். இதற்கு முன்னர் அதிபர் ட்ரம்ப், மாற்று பாலினத்தவர்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். குறிப்பாக ராணுவத்தில் திருநங்கைகளுக்கு தடை விதித்திருந்தார். திருநங்கைகள் அமெரிக்க ராணுவத்தில் சேரவோ அல்லது பணியாற்றவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், ராணுவ வீரர்களுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான அரசு நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டன. இது மட்டுமல்ல, டிரம்ப் நிர்வாகம் மனிதர்களின் பாலினத்தை அடையாளப்படுத்துவதில், மாறுபட்ட கருத்தை கொண்டு இருந்தது. அதாவது ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கும் உயிரியல் குணாதிசயங்களின் அடிப்படையில் ஆண் அல்லது பெண் என்று மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்படும், என்றும் உத்தரவை ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்தது. இதன் மூலம் மாற்று பாலினத்தவர் அல்லது தன் பாலின ஈர்ப்பாளர்களை பாதுகாக்கும் முந்தைய அரசின் உத்தரவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல, திருநங்கைகளுக்கான தனி சிறைச்சாலையும், வீடுற்றோருக்கான தங்குமிடங்களில் தனியாகவும் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால், இவர்கள் மற்றவர்களின் தாக்குதலிலிருந்து ஓரளவு தங்களை பாதுகாத்துக்கொண்டனர். ஆனால், டிரம்ப் அரசு இப்படி தனி இடம் கொடுப்பதை ரத்து செய்தது.. பிறப்பின் அடிப்படையில் ஆணாக இருந்தால், ஆண்கள் தங்குமிடமும், பெண்ணாக இருந்தால்.. பெண்கள் தங்கும் இடமும் மட்டுமே ஒதுக்கி கொடுத்தது. இதனால் மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கும் என்று தெரிந்தும்.. அரசு இதை செய்தது. இது மட்டுமல்லாமல் கல்வி, விளையாட்டில் கூட ஏகப்பட்ட தடைகள் உருவாக்கப்பட்டன. இப்படி இருக்கையில்தான் பாப்பஸின் வெற்றி பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் ஒட்டுமொத்த வரலாற்றிலேயே, குறிப்பாக அமெரிக்க செனட் சபையின் 230 ஆண்டு கால வரலாற்றில்.. ஆண் தன் பாலின ஈர்ப்பாளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர்.. முதன்முறையாக செனட் அவையின் உறுப்பினராக தேர்வாவது இதுதான் முதல் முறையாகும். இந்த வெற்றி மாற்று பாலினத்தவர்களுக்கான மக்களின் ஆதரவை நிரூபித்திருக்கிறது.இஸ்ரேலுக்கு இடியை இறக்கிய டிரம்ப்.. நிதி உதவி நிறுத்தம்! தேர்தல் முடிந்த கையோடு அதிர வைத்த அமெரிக்கா
அமெரிக்கா இடைக்கால தேர்தல்.. டிரம்ப் தோற்றால் அடுத்து என்ன நடக்கும்? பெரிய சிக்கலே இருக்கு!