டிரம்ப்பை பதவி நீக்க முடியுமா? அமெரிக்க இடைத்தேர்தலில் வென்றும் ஜனநாயக கட்சிக்கு பின்னடைவு.. எப்படி?

  • வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் பலருக்கும் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சாத்தியமா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். இதற்கிடையே தான் தற்போது அமெரிக்காவின் நாடாளுமன்றத்திற்காக இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது.

    Advertisement

    நம் நாட்டின் நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா என்று 2 சபைகள் உள்ளது. அதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 சபைகள் உள்ளன. ஒன்று பிரதிநிதிகள் சபை. இன்னொன்று செனட் சபை.

    அந்த வகையில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கும் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இதில் பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களில் ஜனநாயக கட்சி 219 இடங்களிலும், டிரம்பின் குடியரசு கட்சி 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சபையில் மெஜாரிட்டிக்கு மொத்தம் 219 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜனநாயக கட்சி 219 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    Advertisement

    அடுத்ததாக 35 செனட் இடங்களில் நடந்த தேர்தலும் ஜனநாயக கட்சி தான் அதிக இடங்களை கைப்பற்றியது. டிரம்பின் குடியரசு கட்சி பின்தங்கியது. இதன்மூலம் 100 இடங்கள் கொண்ட செனட் சபையில் மெஜாரிட்டிக்கு 51 இடங்கள் தேவை. தற்போது ஜனநாயக கட்சிக்கு 54 இடங்களும், டிரம்பின் குடியரசு கட்சிக்கு 42 இடங்களும் உள்ளது.

    இதன்மூலம் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகள் என 2லும் டொனால்ட் டிரம்ப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. மெஜாரிட்டியை இழந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் தானாக டிரம்ப் பதவியை இழக்கமாட்டார். மீதமுள்ள 2 ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து அதிபராக இருப்பார்.

    Advertisement
    உலகெங்கும் வீழும் வலதுசாரி அரசியல்! டிரம்ப், நெதன்யாகு சரிவைத் தொடர்ந்து அடுத்து மோடியா?

    அதேவேளையில் ஜனநாயக கட்சியினரால் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான Impeachment நடவடிக்கை ஜனநாயக கட்சியால் 2 சபையிலும் கொண்டு வரலாம். இதற்கு முதலில் டிரம்ப் மீதான முறைகேடுகள் பற்றி விசாரிக்க வேண்டும். அதன்பிறகு டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட வேண்டும். அந்த தீர்மானத்தை நிறைவற்ற சிம்பிள் மெஜாரிட்டி போதும். தற்போது ஜனநாயக கட்சிக்கு சிம்பிள் மெஜாரிட்டி பிரதிநிதிகள் சபையில் உள்ளதால் இந்த தீர்மானம் வெற்றி பெறும்.

    Advertisement

    அதன்பிறகு இந்த தீர்மானம் செனட் சபைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் செனட் சபையில் 3ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. செனட் சபையில் 100 இடங்கள் உள்ளன. இதில் 3ல் 2 பங்கு என்றால் சுமார் 64 பேரின் ஆதரவு தேவை. ஆனால் ஜனநாயக கட்சிக்கு சிம்பிள் மெஜாரிட்டிக்கு தேவையான 54 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் டிரம்பின் 10 குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இது கிடைக்காது என்பதால் டிரம்பை பதவி நீக்கும் நடவடிக்கை செனட் சபையால் முறியடிக்கப்படும்.

    எடுபடாத 'டிரம்ப்' பெயர்! தேர்தலில் மொத்தமும் சொதப்பல்! எல்லாம் முடிந்தது!
    Advertisement

    தற்போதைய தேர்தல் முடிவில் டிரம்புக்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதல் இதுதான். அதுமட்டுமின்றி டிரம்ப் Impeachment நடவடிக்கையை இதற்கு முன்பும் எதிர்கொண்டுள்ளார். டிரம்ப் தனது முதல் அதிபர் பதவி காலத்தில் எதிர்கொண்டுள்ளார். அப்போதும் பிரநிதிநிதிகள் சபையில் அவரை நீக்க ஒப்புதல் கிடைத்த நிலையில் செனட் சபையில் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இந்த முறையும் ஜனநாயக கட்சி 'இம்பிச்மென்ட்' நடவடிக்கையை கொண்டு வந்தாலும் செனட் சபையில் உள்ள டிரம்ப் கட்சியினர் அவரை காப்பாற்றி விடுவார்கள்.

    மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவால் டிரம்பின் அதிபர் பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அவரது அரசு சார்ந்த நியமனம், புதிய சட்டங்களை கொண்டு வருவது உள்ளிட்டவற்றை 2 சபைகளிலும் நிறைவேற்ற முடியாது. டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால் இனி டிரம்பால் சுதந்திரமாக செயல்பட முடியாது. ஜனநாயக கட்சியினரின் ஆதரவோடு மட்டுமே செயல்பட முடியும். இது டிரம்பின் செயல்பாட்டை முடக்க வாய்ப்புள்ளது.

    English Summary

    Donald Trump Impeachment: In the U.S. midterm elections, President Donald Trump’s party has faced defeat. The Democratic Party has secured a resounding victory in both chambers of the U.S. Congress—the House of Representatives and the Senate. Given this situation, many are asking: Is it possible to remove Donald Trump from the U.S. presidency? Let us examine whether this is feasible.