வாஷிங்டன்: கடந்த காலங்களில், இந்தியாவை பெரிய அளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டுக்கொண்டது கிடையாது. இப்படி இருக்கையில், அமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தலில் அவர் பின்னடை சந்தித்தால், இந்தியாவுக்கு சாதகமாக அது அமையும்.
ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடிதான் தனது நெருங்கிய நண்பர் என்று பேசி வந்த டிரம்ப், இரண்டாவது முறையாக அவர் அதிபராக பதவியேற்றதற்கு பின்னர், இந்தியாவை அவ்வளவாக கண்டுக்கொள்ளவில்லை.
சரி பேச்சு விஷயத்தில் டிரம்ப் விலகி இருக்கிறார், மற்றபடி இந்தியா-அமெரிக்கா உறவு என்பது எப்பவும்போலத்தான் இருக்கும் என நாம் நினைத்திருந்தோம். அதிலும் வெடி கொளுத்தி போட்டு வேடிக்கை பார்த்தார் டிரம்ப். மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் (MAGA) கொள்கையின் கீழ், இந்தியாவின் மீது கடுமையான வர்த்தக வரிகள் விதிக்கப்பட்டன. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் மீது 100% வரை வரிகளை விதிக்கும் புதிய சட்டத்தில் டிரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார். பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த இந்தியாவின் கவலைகளை புறந்தள்ளிவிட்டு, டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுடன் மீண்டும் உறவை வலுப்படுத்தி வருவதும் நம்மை டென்ஷனாக்கியது. இது போதாது என்று.. அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியர்கள் மீது H-1B விசாக்கள் மூலம் வேலைகளை திருடுவதாக டிரம்ப் ஆதரவாளர்களும், சமூக ஊடகங்களும் கடுமையான இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றனர். மேலும், முறையான ஆவணங்களின்றி இருந்த சில இந்தியர்களை சங்கிலியால் பிணைத்து டிரம்ப் அரசு நாடு கடத்தியது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் கூட நமக்கும் அமெரிக்காவுக்கும் பஞ்சாயத்து வந்திருக்கிறது. அப்போதெல்லாம், அமெரிக்காவை நாம் வெளிப்படையாக விமர்சிக்க மாட்டோம். ஆனால், கடந்த மாதம் நியூயார்க்கில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "டிரம்ப் நிர்வாகம் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளில் உணர்ச்சியற்ற பங்காளியாக செயல்படுகிறது. மட்டுமல்லாது சுயநலமான வர்த்தகக் கொள்கைகளை பின்பற்றுகிறது" என்று வெளிப்படையாக போட்டு உடைத்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த விஷயத்தில் ஓபனாக விமர்சித்திருந்தார். நிலைமை இப்படி இருக்கையில்தான், தற்போது அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. நவ.3ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் அந்நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி டிரம்ப்புக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. எனவே அமெரிக்கர்கள் டிரம்புக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர். அமெரிக்கா வாழ் இந்தியர்களும் டிரம்புக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கின்றனர். ஒருவேளை டிரம்ப் இடைத்தேர்தலில் பெரும்பான்மையை இழந்தால், அது இந்தியாவுக்குதான் பாசிட்டிவாக அமையும். ஏனெனில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயக கட்சியினர் பலரும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே டிரம்பின் பின்னடைவு இந்தியாவுக்கு நல்ல சேதிதான்.காலை வாரிய டிரம்ப்
நம்மை டென்ஷனாக்கிய விஷயம்
இந்தியாவின் நிலைபாடு
டிரம்புக்கு எதிரான மனநிலை
நல்ல சேதி