60 ஆண்டுகளாக தொடரும் தடை.. ஐநாவில் கியூபாவுக்கு ஆதரவாக ஒட்டு போட்ட இந்தியா! அமெரிக்கா ஷாக்!

  • வாஷிங்டன்: அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடையால், கியூபா 60 ஆண்டுகளாக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த பொருளாதார தடைகளுக்கு எதிராக ஐநாவில் இந்தியா வாக்களித்திருக்கிறது.

    Advertisement

    60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த தடையால் கியூபா மக்கள் சந்திக்கும் பொருளாதாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தத்துப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

    Advertisement

    ஐநா பொது சபையின், 193 உறுப்பு நாடுகள் இடையே அக்.28 அன்று இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 130 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 17 நாடுகள், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இதில் ஜெர்மனி, இத்தாலி போன்ற சில மேற்கத்திய நாடுகள் உட்பட 25 நாடுகள்.. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

    ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர், சௌமியா நாயர் இந்தியாவின் சார்பில் உரையாற்றினார். அவர் முன்வைத்த கருத்துக்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கின்றன.

    Advertisement

    அவர் பேசியதாவது, "மற்ற நாடுகளின் இறையாண்மையையும், மக்களின் முன்னேற்றத்தையும் பாதிக்கும் வகையில், ஒரு நாடு தன் எல்லைகளை தாண்டி.. பிற நாடுகளில் மீது திணிக்கும் இது போன்ற சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஐநா பொதுச் செயலாளரின் அறிக்கையை பார்க்கும்போது, இந்த தடையால் கியூபாவின் மருத்துவ கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, 60 சதவீதத்திற்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது.

    மேலும், கடந்த 5 ஆண்டுகளில் கியூபாவின் உணவு உற்பத்தி, 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. எரிபொருள் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால்.. அங்கு கடுமையான மின் தட்டுப்பாடும், அத்தியாவசிய சேவைகளில் முடக்கமும் ஏற்பட்டுள்ளது" என சௌமியா நாயர் சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    வாக்கெடுப்புக்கு முந்தைய நாள், ஐநா பொது சபை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஐநாவுக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் வால்ட்ஸ், கியூபா அரசை விமர்சித்து பேசிக் கொண்டிருந்தபோது.. கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் மற்றும் கியூபா தூதர்கள், தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து.. நேரடியாக மேடை நோக்கி சென்று.. அமெரிக்கா தூதருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருதரப்புக்கும் இடையே வார்த்தை போர் முற்றியதால், அவையை வழிநடத்திய ஐநா பொது சபை தலைவர் கலீலூர் ரஹ்மான், நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

    Advertisement

    இந்த முதலில் போது, அமெரிக்கா தூதரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறி.. கியூபா தூதரகத்தின் செயலாளர் ரிச்சர்ட் டூர் டி லா-வை அமெரிக்கா உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றியது.

    அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையிலான இந்த அரசியல் மோதல், 1959ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது கியூபாவில், பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சி வெடித்தது.. அமெரிக்க ஆதரவு அரசு கவிழ்க்கப்பட்டது. சோவியத் யூனியன் உடனும், சீனாவுடனும் கியூபா கோர்த்துதால்.. அந்நாட்டிற்கு கம்யூனிஸ்ட் அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் நோக்கில்.. அமெரிக்கா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடுமையான வர்த்தகம் மற்றும் பொருளாதார தடையை நீடித்து வருகிறது.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் ஐநாவில், தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்.. ஐநா பொது சபையின் இந்த தீர்மானங்கள் சட்டபூர்வமாக அமெரிக்காவை கட்டுப்படுத்தாது. ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றும் தீர்மானங்கள் மட்டுமே, அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாட்டையும் கட்டுப்படுத்தும். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தை நிறைவேற்றுவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

    Topics: #india #cuba #un

    English Summary

    For 60 years, Cuba has faced severe hardships due to stringent economic sanctions imposed by the United States. In this context, India has voted at the United Nations against these economic sanctions.