தொடர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடு.. ஐநாவில் பாகிஸ்தானை அடித்த ஜெய்சங்கர்

  • வாஷிங்டன்: இந்தியா சார்பில் ஐநா சபையில் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது தொடர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடு பாகிஸ்தான் என்று அவர் விமர்சனம் செய்ததோடு, பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதத்தையும் தோலுரித்து காட்டியதோடு, வார்னிங்கும் கொடுத்தார்.

    Advertisement

    அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பொதுச்சபை அமைந்துள்ளது. இந்த பொதுச்சபையின் 81வது கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

    Advertisement

    இந்தியா சார்பில மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ''தொடர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடு (பாகிஸ்தான்) நேற்று பேசியது. பயங்கரவாதத்தை இயலபாக்குவதற்கும், அதற்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்கும் தொடர்ந்து அந்த நாடு முயற்சித்து வருகிறது. இந்த நாட்டின் பயங்கரவாத செயலுக்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது. அதேபோல் ஒவ்வொரு பயங்கரவாத செயல்களுக்கும் சரியான பதிலடி கொடுக்கப்படும்.

    ஒவ்வொரு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புதன்மையற்ற அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இதில் எந்த தளர்வும் இருக்கககூடாது. பயங்கரவாதத்துக்கு பின்னால் உள்ள நெட்வொர்க்கை கண்டறிந்து கலைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு செல்லும் நிதியை முறியடிக்கவேண்டும்.

    Advertisement

    பயங்கரவாதமும், நட்பும் ஒருசேர இருக்க முடியாது. ஒரு நாட்டுக்கு எதிராக பயங்கரவாதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படும்போது ஒத்துழைப்பும், நல்லெண்ணமும் மாற்றமின்றித் தொடர முடியாது. இதனால் பயங்கரவாதத்தை வளர்த்து விடுபவர்கள் தான் அதற்கான வழியை சரிசெய்து கொள்ள வேண்டும்.

    இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் இருதரப்பு பேச்சுவார்த்தையை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வந்தது. நீடித்த அமைதிக்கு இது அவசியம் என்று இந்தியா நம்புகிறது. பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

    அதேபோல் சர்வதேச நீர்வழிப்பாதைகளில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களையும், மாலுமிகளையும் குறிவைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அனைவரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களை காக்கவும், எரிசக்தி, வர்த்தம் உள்ளிட்டவற்றின் தடையற்ற சேவையை உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.

    English Summary

    Union External Affairs Minister Jaishankar addressed the United Nations today on behalf of India. He criticized Pakistan for its continued involvement in terrorism, exposed the country's terrorist activities, and issued a warning.