திமிராவ இருக்கீங்க.. டிரம்ப் நிகழ்ச்சிகள் இனி ஊடகங்களில் வராது.. அமெரிக்க மீடியாக்கள் கொடுத்த அடி

  • வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக அந்த நாட்டின் முன்னணி ஊடகங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை டொனால்ட் டிரம்ப் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வது இல்லை என்று அதிரடியாக அறிவித்து அதனை கடைப்பிடித்து வருகின்றன. இது டொனால்ட் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊடகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறார். தன்னை பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களை தண்டிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    அந்த வகையில் தான் அமெரிக்காவின் பிரபல ஊடகங்களாக உள்ள சிஎன்என் (CNN), போலிட்டிக்கோ (Politico) மற்றும் எம்எஸ் நவ் (MS Now) உள்ளிட்ட ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய இனி அனுமதியில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 18 ம் தேதி அறிவிப்பு செய்தார்.

    அதாவது இந்த 3 ஊடகங்களும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி தவறான மற்றும் புனையப்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையே தான் நேற்றைய தினம் இந்த 3 ஊடகங்களை சேர்ந்தவர்கள் வெள்ளை மாளிகைக்கு செய்தி சேகரிக்க சென்றனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதையடுத்து அந்த 3 ஊடகங்களும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் எதை வெளியிட வேண்டும். எதை வெளியிட கூடாது என்பதை அரசு தீர்மானிக்க கூடாது. இந்த கொள்கையை அமெரிக்க அரசு பாதுகாக்க வேண்டும். டிரம்பின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக 3 ஊடக நிறுவனங்களும் அறிவித்தன. மேலும் நேற்று நீதிமன்றத்தை நாடின.

    இது ஒருபுறம் இருக்க டிரம்பின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிற பிரபல செய்தி நிறுவனங்களும் டிரம்பின் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்தன. அதன்படி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் நேற்றைய தினம் டிரம்ப் நிகழ்ச்சி தொடர்பான போட்டோக்களை வெளியிடவில்லை. வெள்ளை மாளிகைக்குள் நுழைய 3 ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக டிரம்ப் அரசு நீக்க வேண்டும் என்று கூறி வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் இந்த ஆக்‌ஷனில் ஈடுபட்டுள்ளன.

    Advertisement

    இதனால் நேற்று டிரம்ப் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது, ஐநா பொதுச்சபையில் பங்கேற்க நியூயார்க் சென்றது தொடர்பான எந்த காட்சிகளும் தொலைக்காட்சி சேனல் மற்றும் செய்தித்தாள்களில் வரவில்லை. அதுமட்டுமின்றி நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் தனது வெள்ளை மாளிகையில் புதிய மரைன் ஒன் ஹெலிபேட்டை திறந்து வைத்தார்.

    இதுதொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகவில்லை. மாறாக இது வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் மட்டுமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் அதில் டிரம்பின் பேச்சு சரியாக கேட்கவில்லை. இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வேறு வழியின்றி டிரம்ப் நிர்வாகம் உடனடியாக சொந்தமாக 'டிரம்ப் டிவி' என்ற ஸ்டீரிமிங் சேனலை உருவாக்கி உள்ளது. அதில் 24/7 என்ற அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    English Summary

    Leading US media outlets in the United States have raised a banner of revolt against President Donald Trump. They have taken the bold step of refusing to broadcast programs featuring him until their demands are met-a policy they are actively enforcing-thereby creating difficulties for the President.