வசமாக சிக்கிய என்விடியா ECO! யார் இந்த 'மெகாஸ்பீட்'! அமெரிக்க ரேடாரில் சிக்காமல் தப்பியது எப்படி?

  • வாஷிங்டன்: என்விடியா ECO ஜென்சன் ஹுவாங், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால் வசமாக சிக்கியிருக்கிறார். அதைவிட முக்கியமான விஷயம் அவருடன் பழகிய இளம்பெண், சீனாவின் ரகசிய ஏஜென்ட்டாக இருக்கலாம் என்று எழுந்திருக்கும் சந்தேகம்தான். இந்த பெண், சிங்கப்பூரின் 'மெகாபீஸ்ட்' எனும் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிறுவனம் என்ன செய்கிறது? எப்படி அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி உளவு வேலையை பார்த்து என்பது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

    Advertisement

    'மெகாபீஸ்ட் இன்டர்நேஷனல்' என்பது சிங்கப்பூரிலிருந்து இயங்கிவரும் ஒரு டேட்டா சென்ட்டராகும். இது ஏஐ கம்ப்யூட்டிங் சேவையையும் வழங்கி வருகிறது. இதன் முக்கிய பொறுப்பில்தான் ஆலிஸ் ஹுவாங் இருக்கிறார்.

    Advertisement

    இவருக்கும், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங்குக்கும் இடையே ரகசியமாக காதல் மலர்ந்திருக்கிறது. இதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம்தான் என்றாலும்.. அமெரிக்கா சில விஷயங்களை மோப்பம் பிடித்ததால்.. தற்போது மிகப்பெரிய உண்மை வெளியில் வந்திருக்கிறது.

    மெகாஸ்பீட் நிறுவனம், என் வீடியோ குடும்பத்தின் அதிகாரப்பூர்வ கிளவுட் பார்ட்னர் நெட்வொர்க்கில் ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கான முக்கிய பங்காளியாக செயல்பட்டு வருகிறது. கேமிங் நிதித்துறை நிதித்துறை, ஆட்டோமேட்டிக் வாகனங்கள், நகர நிர்வாகம் மற்றும் இமேஜ் ரெககனைசேஷன் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளுக்கு தேவையான AI சேவைகளை இது வழங்கி வருகிறது. AI மாடல்களுக்கு பயிற்சி அளிப்பது.. அவற்றை டெஸ்ட் செய்து பார்ப்பது மற்றும் செயற்கை AI அப்ளிகேஷன்களை இயக்குவதற்கு தேவையான கம்ப்யூட்டிங் பவரை வழங்குவதும் இதன் முக்கியமான வேலையாகும்.

    Advertisement

    AI துறையை பொறுத்தவரை, சீனா தங்களை ஓவர் டேக் செய்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிக கவனமாக இருக்கிறது. எனவே, ராணுவ பயன்பாடு மற்றும் சக்தி வாய்ந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படக்கூடிய அதிநவீன சிப்புகளை.. சீனாவுக்கு விற்கக் கூடாது என்று என்விடியா உட்பட சிப் தயரிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது.

    நிலைமை இப்படி இருக்கையில், இந்த மெகாபீஸ்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய மலேசிய நிறுவனம் ஒன்று.. கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார்.. ரூ.40,000 கோடிக்கும் மேல் என்விடியா சிப்புகளை அடங்கிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உபகரணங்களை வாங்கி இருக்கிறது. இது வாங்கப்பட்டதே தவிர.. அடுத்து அதை எங்கு பயன்படுத்தினார்கள் என்பது குறித்த எந்த விவரமும் இல்லை.

    Advertisement

    அமெரிக்காவுக்கு நோக்கம்.. சிப் சீனா கைக்கு போகக்கூடாது என்பதுதான். அதேபோல மெகாஸ்பீட் நிறுவனம் AI துறையில்தான் வேலை பார்த்து வருகிறது என்பதால்.. சிப் பற்றி ஆரம்பத்தில் சந்தேகம் எழவில்லை. இருப்பினும் மெகாஸ்பீட் பெரிய நிர்வாகி.. ஆலிஸ் என்விடியா சிஇஓ உடன் நெருக்கமாக பழகியதுதான் அமெரிக்காவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவேதான் ரூ.40,000 கோடிக்கும் மேல் வாங்கிய சிப்புகள் எங்கே போனது என்று அமெரிக்க தோண்ட தொடங்கியது. இந்த சிப்புகள் சீனாவுக்கு ரகசியமாக கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது.

    இந்த சந்தேகம் இப்போது எழுந்தது கிடையாது.. கடந்த ஆண்டே டவுட் இருந்தது. அப்போது அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து.. சிங்கப்பூர் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மெகாபீஸ்ட் நிறுவனம் மறுத்ததுடன் செய்திகளில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் விளக்கம் அளித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Topics: #china #us

    English Summary

    Megaspeed: Nvidia CEO Jensen Huang has found himself in a tight spot due to an extramarital affair. More concerning, however, is the suspicion that the young woman involved might be a secret agent for China. She holds a high-ranking position at a Singapore-based company called 'MegaBeast.' What does this company do, and how did it manage to conduct espionage right under the nose of the United States? Let’s take a detailed look.